கூகுளின் ஆன்லைன் சேமிப்பகம் எந்தத் தேவைக்கும் தன்னை விட்டு வேறு எவரையும் தேடிச் செல்வதை விரும்புவதில்லை கூகுள். அப்படி ஒரு சேவையாக நெடு நாட்களாக ஹாட்மெயிலின் °கை டிரைவ் (ளுமல னுசiஎந) மற்றும் டிராப் பாக்° (னுசடியீ க்ஷடிஒ) நிறுவனங்கள் வழங்கி வரும் ஆன்லைன் தகவல் சேமிப்பு வசதியை ஜிடிரைவ் என்ற பெயரில் கூகுளும் கொடுக்க இருப்பதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சேவையை ஜிமெயில் கணக்கிலிருந்தே இலவசமாக பயன்படுத்தலாம் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.