ஷியாம் சரண் ( முன்னாள் செயலாளர்), வெளியுறவுத்துறை) ஆர்க்டிக் துருவத்தின் வளங்களை நோக்கி……… பூமிப்பந்தின் தென் துருவமான அண்டார் டிக்காவிலும், வட துருவமான ஆர்க்டிக்கிலும் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. உலக நாடுகளின் கவனமெல்லாம் தற்போது இவைகளைக் கையகப்படுத்துவதில் திரும்பி யுள்ளது. ஆனால், 1959ல் ஒரு நல்ல திருப்ப மாக உலக நாடுகளெல்லாம் ஒன்றுசேர்ந்து அண்டார்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டன. பனி சூழ்ந்த இக்கண்டத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளை மட்டும் மேற்கொள்வது என்ற ஆரோக்கியமான முடிவு மேற்கொள்ளப்பட் டுள்ளது. எண்ணெய், எரி வாயு மற்றும் ஏராள மான இயற்கை வளங்கள் நிறைந்திருந்தாலும், இக்கண்டத்தின் நிலப்பரப்பினை பங்கீடு செய்துகொள்ளவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ உலக நாடுகள் தற்போதைக்கு எத்தணிக்க வில்லை என்பது திருப்திகரமான விஷய மாகும். இந்த ஒப்பந்த காலம் முடிந்த பிறகு அண்டார்டிக் பகுதியிலும் உலக நாடுகள் வளங்களைத் தேடும் தங்களின் போட்டியைத் தொடங்கலாம். ஆனால், வட துருவமான ஆர்க்டிக் நிலப் பரப்பு குறித்து உலக நாடுகளிடையே இத்தகு ஒப்பந்தங்கள் ஏதும் ஏற்படாத காரணத்தி னால், இதனைச் சுற்றியுள்ள நாடுகள் இதன் நிலப்பரப்பையும், நீர்பரப்பையும் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆர்க்டிக் வளைவு எனப்படும் இப்பகுதி 21 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், 13 மில்லியன் சதுர கிலோமீட்டர் பனியால் மூடப்பட்ட கட லையும் கொண்டதாகும். ஆர்க்டிக் வளை வைச் சுற்றியுள்ள அமெரிக்கா, கனடா, டென் மார்க், நார்வே, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளும் இதன் இயற்கை வளங்களை தங்களுக்குள் பங்கீடு செய்து கொள்ளும் முயற்சியில் உள்ளன. சென்ற ஆண்டு, மக்கள் சீனாவின் கப்பல் படை அதிகாரி ஒருவர், ஆர்க்டிக் வளைவு, உலக நாடுகள் அனைத்துக்கும் சொந்தமானதாகும் என்றும் அவ்வகையில் சீனாவிற்கும் ஆர்க் டிக் பிரதேசத்தில் பாத்தியதை உண்டு என் றும் பேசியது ஒரு சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. உலகில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 40 சதவீதமும், ஏராளமான அள வில் நிலக்கரி, வெள்ளி, மற்றும் துத்தநாகமும் ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ளன எனக் கணக் கிடப்பட்டுள்ளது. புவி வெப்பமாதல் விரைந்து நடைபெறுவதால், ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனி உருகுதலும் விரைவாகி வருகிறது. இத னால் இப்பிரதேசத்திற்குள் நுழைந்து இயற்கை வளங்களைத் தோண்டி எடுப்பதற்கான சாத் தியப்பாடும் கூடியுள்ளது. 2011ல் ரஷ்யாவுக்கு அருகாமையில் உள்ள ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய் வளத்தைத் தோண்டி எடுப்பதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனி ரஷ்யக் கம்பெனி ரா°னெட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆர்க்டிக் பகுதி வழியாக கோடை காலங் களில் கப்பல் பயணமும் சாத்தியமாகியுள்ளது. சென்ற நூற்றாண்டில் வெறும் கனவாக இருந்த ஆர்க்டிக் வழிக் கப்பல் பயணம் இன்று நனவாகியுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளிலி ருந்து வட அமெரிக்கா,மற்றும் ஐரோப்பிய நாடு கள் செல்வதற்கு தற்போது உள்ள கடல் வழி சூய° கணவாயைச் சுற்றிச் செல்வதால் நீண்டு நெடியதாக உள்ளது. எடுத்துக்காட்டாக கிழக்கு ஆசிய நகரமான யோகஹாமாவிலி ருந்து ஐரோப்பிய நகரமான ரொட்டர்டாம் செல்ல தற்போதுள்ள வழியான சூய° கண வாயைச் சுற்றிச் செல்லுவதற்கு 20,921 கி.மீ. தூரமாகும். ஆனால் ஆர்க்டிக் துருவத்தை ஒட் டிச் சென்றால் 12,894கி.மீ. தூரம்தான். அதே போல் யோகஹாமாவிலிருந்து வட அமெரிக்க நகரமான சான்பிரான்சி°கோ செல்லுவதற்கு பனாமா, சூய°, கணவாய்களையெல்லாம் சுற் றாமல் ஆர்க்டிக் வளைவு வழி சென்றால் 4000 கி.மீ. தூரம் குறைவானது. கப்பல்கள் ஆர்க்டிக் வழியில் செல்லும் பட்சத்தில் தற்போதுள்ள துறைமுகங்கள் எல்லாம் அவைகளின் சிறப்புகளை இழக்க நேரிடும். ஆர்க்டிக் வழி யில் உள்ள துறைமுகங்கள் சிறப்பு பெறும். இத னால் புவி அரசியல் நிலைமைகளில் மிகப் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அமெரிக்க ஏகாதிபத்தியம் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேலும் தன் மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் ஏதுவாகும். சமீப காலமாக ஆர்க்டிக் சுற்றுலா பயணி களையும் அதிகம் ஈர்த்துள்ளது. 2010ம் ஆண் டில் மட்டும் 50,000 பேர் இதுவரை யாரும் சென்றிராத, தூய்மையான நீர்பரப்பைக் கொண்ட இப்பகுதிக்குச் சுற்றுலா சென்று மகிழ்ந்துள்ளனர். சுற்றுலா முக்கியத்துவமும், இயற்கை வளங்களும் இருப்பதால்தான் ஆர்க் டிக் வளைவைச் சுற்றியள்ள நாடுகள் இப் பகுதியை தங்களுக்கே சொந்தமாக்கி, வேறு எந்த நாடும் நுளைவதை விரும்பவில்லை. பனி உறைந்த ஆர்க்டிக்கின் இயற்கை வளங் களை பங்கீடு செய்து கொள்வதில் ஆர்க்டிக் வளைவைச் சுற்றியுள்ள இந்த ஐந்து நாடுகளி டையேயும் பதற்றமும், போட்டியும் நிலவு கிறது. ஏற்கனவே வளர்ந்த நாடுகளான இந்த ஐந்து நாடுகளும் ஆர்க்டிக் பகுதியின் அருகா மையில் இருக்கின்ற ஒரே காரணத்தினால் மேலும் பொருளாதார வளம் பெற வாய்பைப் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக ரஷ்யா ஆர்க் டிக் பகுதியின் மிக அருகில் இருப்பதாலும், அதன் மிக அசாதாரணமான குளிருக்கு பழக்கப் பட்டிருப்பதாலும் அதிகப் பயனை அடைய வுள்ளது. உலக நாடுகளெல்லாம் புவி வெப்பமாவ தால், வட மற்றும் தென் துருவங்களில் பனி உருகி, கடல் நீர் மட்டம் உயர்ந்து நடக்கவிருக் கும் அழிவினை எதிர் நோக்கி அச்சத்துடன் இருக்கும்போது, ஆர்க்டிக் வளைவைச் சுற்றியுள்ள இந்நாடுகள் இதை தங்களுக்கு ஆதாயமாக மாற்ற முயலுகின்றன. தங்க ளுக்குக் கிடைக்கவிருக்கும் ஆதாயத்தை மன தில் கொண்டு, புவி வெப்பமாவதினால் ஏற் படவிருக்கும் பேரழிவுவைக் குறைத்து மதிப் பீடு செய்கின்றன. புவி வெப்பமாவதால் உலக நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளில் பெரும் மாற்றம் ஏற்படவிருப்பதையும், அதனால் பருவ மழையை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் பாதிக்கப்போவதையும் குறித்து இந் நாடுகளுக்குக் கவலையில்லை. விரைந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் புவி வெப்பமாகும் பிரச்சனையை உலக நாடுகள் எல்லாம் ஒன் றிணைந்து சந்திக்க வேண்டிய இந்த அபாய கரமான சூழ் நிலையை புறந்தள்ளிவிட்டு, இதில் ஆதாயம் தேட நினைப்பது கவலை யளிக்கும் விஷயமாகும். பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து விட்டு, புவி வெப்பத்தை அதிகரிக்காத மாற்று எரி சக்தி நோக்கிச் செல்லவேண்டிய அவ சியத்தை அலட்சியப்படுத்தியும் தங்களின் சுய நலத்திற்காக இப்பிரச்சனையின் மீது அக் கறையின்றியும் இருக்கின்றன. உலக நாடு களின் எண்ணெய் கம்பெனிகள், தங்களுக்கு கிடைத்துள்ள புதிய வாய்ப்பாகக் கருதி ஆர்க் டிக் பகுதியில் உள்ள எண்ணெய் வளங் களைத் தோண்டி எடுக்க விரைந்து செல்லு கின்றன. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள இப்பகாசுர எண்ணெய் கம் பெனிகளுக்கு புவி வெப்பமாவது குறித்து எந்தக் கவலையும் இல்லை. சீதோஷ்ண மாற் றப் பிரச்சனை குறித்து ஐ. நா. சபை எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் எல்லாம் இக்கம்பெனிகளின் பேராசையால் அர்த்த மற்றுப்போகின்றன. ஆர்க்டிக் பகுதியின் எண் ணெய் வளங்களைக் கொள்ளையடிக்கக் காத் திருக்கும் இந்த ஐந்து வளர்ந்த நாடுகளுக்கு வளரும் நாடுகளை நோக்கி புதை எரி பொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்பதற்கு அருகதையில்லை. தென் அமெரிக்காவின் அமேசான், மத்திய ஆப்பிரிக்கா, மற்றும் இந்தோனேசியா தீவு களில் உள்ள மழைக் காடுகளின் முக்கியத் துவம் கருதி, அவைகள் உலகின் பொதுமை யில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மழைக் காடு கள் காப்பாற்றப்படாவிட்டால் பூமியின் சூழல் மண்டலம் பாதிக்கப்படும். இக்காடுகள் இந்த நாடுகளுக்கு மட்டும் சொந்தமான தேசிய வளங்களாகாது. உலகின் மற்ற நாடுகளுக்கும் இச்சூழல் மண்டலத்தைப் போற்றிப் பாது காக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதே போல் ஆர்க்டிக் பகுதியின் சூழல் மண்டலத் தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உல கின் அனைத்து நாடுகளுக்கும் உண்டு. ஆர்க் டிக் பகுதியின் சூழல் மண்டலத்தைச் சீண்டு வோமேயானால், அது இப்புவியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும். ஆர்க்டிக் பகுதியையும் அண்டார்டிக்கா கண் டத்தைப் போன்றே பொதுமையில் வைத்துப் பாதுகாத்திட வேண்டும். ஆர்க்டிக் பகுதியைச் சேராத இந்தியா உட்பட அனைத்து நாடுக ளுக்கும் இதன் தூய்மையைப் பாதுகாத்திடு வதற்கான உரிமை உண்டு. ஆர்க்டிக் பகுதி, அண்டார்டிக்கா கண்டம் போல் உலக நாடு கள் அனைத்துக்கும் பொதுவானது என்பதை நிலை நாட்டிட உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமையாகும். 1959ல் உருவான அண்டார்ட்டிகா ஒப்பந்தத்தைப் போல், ஆர்க்டிக் பகுதிக்கும் உலகளாவிய அளவில் சட்டப் பூர்வமான ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிடவேண்டும். வளர்ந்து வரும் இந்தியப் பொருளா தாரத்தை மேம்படுத்த இந்தியாவும், சீனா வைப் போல் ஆர்க்டிக் வளங்களைப் கையகப் படுத்தவதற்கு உரிமை கொண்டாட வேண் டும் என்று நம்மில் சிலர் வாதாடலாம். ஆனால், இவ்வாதம் குறுகிய சிந்தனையின் அடிப்ப டையில் எழுவதாகும். வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆர்க்டிக் வளங் களை அள்ளிக் கொண்டு வரும் அளவிற்கு இந்தியாவின் தொழில் நுட்பம் வளர்ச்சி பெறவில்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிடைப்பதைச் சுருட் டுவது என்று முயற்சிப்போமேயானால் பெரிய பலன் ஏதும் இருக்காது. 1996ல் ஆர்க்டிக் குழு உருவாக்கப்பட்டு அதில் அமெரிக்கா, கனடா, ரஷ்யா, நார்வே, டென்மார்க், °வீடன், பின்லாந்து, ஐ°லாந்து ஆகிய எட்டு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்குழுவில் நிரந்தரப் பார்வையாளராக இருப் பதற்கு இந்தியா விண்ணப்பித்துள்ளதை மறு பரிசீலனை செய்திட வேண்டும். இதில் ஏற் கனவே இங்கிலாந்து, பிரான்சு, ஹாலந்து, போலந்து, மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடு கள் நிரந்தரப் பார்வையாளர்களாக இருக்கின் றன. இந்தியாவைப்போல், பிரேசில், ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளும் இத் தகுதிக்கு விண்ணப்பித்துள்ளன. ஆனால் இத் தகுதியைப் பெற்றிட ஆர்க்டிக் கடற்பகுதியின் மீது ஆர்க்டிக் குழு நாடுகளுக்கு தற்போது இருந்துவரும் பாத்தியதையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை யாகும். எனவே, இம்முயற்சியை இந்தியா கை விட்டு விட்டு, அண்டார்டிக்காவிற்கு இருப் பதுபோல் ஆர்க்டிக் பகுதிக்கும் ஓர் ஒப்பந்தம் உருவாவதற்கு முன் முயற்சி எடுக்க வேண் டும். 1959ல் அண்டார்டிக்கா ஒப்பந்தம் ஏற் பட்ட சூழலைவிட தற்போது புவி வெப்பமய மாதல் நிலைமை மோசமாகி இருப்பதால், இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா நீடித் திருக்கும் காலத்தில், இப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து இந்தியா தொடர்ந்து பேசி உலக அளவிளான செயல் திட்டத்திற்கு முன் முயற்சி எடுக்கமேயானால் அது வரலாற்றுச் சிறப்புமிக்க செயலாக அமையும். – ‘தி இந்து’ கட்டுரை (1-2-12) தமிழில் : பேரா. பெ.விஜயகுமார்

Leave A Reply

%d bloggers like this: