கடலூரில் பூகம்பம் ஏற்பட்டதாக வதந்தி கடலூர், பிப். 14 – கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க் கிழமை மதியம் 12 மணியளவில் மிகப் பெரிய சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட சிலர் பக்கத்து கிராமங் களுக்கு செல்பேசியில் பூகம்பம் வந்து விட்டதா, விமானம் வெடித்து விழுந்து விட்டதா, வெடி வெடித்துவிட்டதா என கேட் கத் தொடங்கிவிட்டனர். இது மிகப்பெரிய வதந்தியாக மாறி அனைத்து கிராமங்களுக் கும் பரவியது. எந்த கிராமத்திலும் யாராலும் ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. அந்த கிராமத்தில் வீடு எரிகிறது, இந்த கிராமத்தில் பூமி பிளந்துவிட்டது என பீதியைக் கிளப்பி தொலைபேசி அழைப்பு கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பறந்தவண்ணம் இருந்தன. பத்திரிகையாளர்கள் பல இடங்களில் விசாரித்தும், நேரடியாக பல கிராமங்களுக் கும் சென்று பார்த்தும் உண்மையைக் கண் டறிய முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்ட போது, விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். இதற்கிடையில் மக்களைப்பற்றி கவலைப் படாமல் வியாபாரத்தை மட்டுமே குறி வைத்து இருக்கும் சில தனியார் தொலைக் காட்சி நிறுவனங்கள் கடலூர் மாவட்டத் தில் பூகம்பம் ஏற்பட்டு உள்ளது, 4.5 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது என பொய்யை வாரி வீசின. இதனால் மக்களுக்கு பயம் அதிகமாகி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஓட ஆரம்பித்தனர். பண்ருட்டி பகுதியில் சில தனியார் பள்ளிகள் உடனடியாக விடு முறை அறிவித்தன. இதனால் பதற்றம் அதி கமானது. இந்நிலையில் மதியம் பத்திரிகையாளர் களைச் சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்ணு, இது வெறும் வதந்தி, மாவட்டத்தில் எந்த அசம்பாவித சம்பவ மும் நடைபெறவில்லை. இந்திய விமானப் படைக்கு சொந்தமான நவீன ரக விமானம் சூப்பர் சோனிக், இதில் பயிற்சி பெற்ற இரண்டுபேர் மட்டுமே போகமுடியும். 6ஆயிரம் மீட்டருக்குமேல், ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். இத்தகைய விமா னம் பறக்கும்போது தாழ்வாக பறந்தாலோ, தட்பவெப்பநிலை மாற்றத்தாலோ “சோனிக் பூம்” என்ற மிகப்பெரிய சத்தம் கேட்கும். இதுதான் வதந்திக்குக் காரணம். தேவை யில்லாமல் வதந்தியை பரப்பினால் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார். கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகும், தானே புயலுக்குப் பிறகும் மக்கள் பயம் கலந்தே வாழ்கின்றனர். இதுபோன்ற வதந்திகளும் தொடர்ந்து பரப்பப்படுவதால் மேலும் பதற்றம் அதிகரிக்கிறது. இதற்கு முற் றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: