ஓஎன்ஜிசி பங்குகளை தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு குர்கான்: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்குச் (ஓஎன் ஜிசி) சொந்தமான ரூ.12,000 கோடி மதிப் புள்ள 5 சதவீதம் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமையன்று நடக்கவுள்ளது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஓஎன்ஜிசிக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கள் தொடர்பாக கலந்துரையாடல் புதன் கிழமையன்று நடைபெறவுள்ளது என்று எண்ணெய் வளத்துறை அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி பத்திரிகையாளர் களிடம் தெரிவித்தார். அரசுக்குச் சொந்தமான 74.14 சதவீதப் பங்குகளிலிருந்து 5 சதவீதத்தை விற்பனை செய்வதன்மூலம், ஓஎன்ஜிசியில் அரசின் முதலீடு 69.14 சதவீதமாகக் குறையும்.

Leave A Reply

%d bloggers like this: