ஒரே நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில்… ஆங்கிலப் படங்களில் பரபரப்பான சண்டைக்காட் சிகளில் தோன்றி மிகவும் பிரபலமான நடிகர்களான அர் னால்டு °வார்°னெகர் மற்றும் சில்வ°டர் °டால்லோன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில், ஒரே மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். இருவரும் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததற்கான காரணமும் ஒன்றுதான். சண்டைக்காட்சி யில் நடிக்கும்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் இருவரும் இருப்பது போன்ற புகைப்படங்களை அர்னால்டு இணையதளத்தில் வெளி யிட்டார். தனது தளத்தில் எழுதிய அவர், அனைத்து கடி னமான பணிகளுக்குப்பிறகு, தோள்பட்டையில் ஏற்பட் டிருந்த காயமொன்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியி ருந்தது. எனக்குப்பின்னால் யாரென்று பாருங்கள். தற் செயலாக இருவரும் ஒரே நேரத்தில், ஒரே மருத்துவ மனையில், ஒரே சிகிச்சைக்காக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply