அமைதியின்மையை நோக்கி நகர்கிறது பிரிட்டன்? லண்டன், பிப்.14 – பொருளாதார நெருக் கடி, ஏற்றத்தாழ்வுகள் அதி கரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளோடு வேலையின்மை அதிகரிப் பும் உள்ளதால், வரும் கோடைக்காலத்தில் கடுமை யான அமைதியின்மை பிரிட்டனில் ஏற்படும் என்று அங்கு மேற்கொள் ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது. சிட்டிசன்° யு.கே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் பல்வேறு விபரங்கள் தெரிய வந்துள்ளன. 1930களின் பெருமந்தக் காலகட்டத்தில் இருந்ததைவிட மோசமாக வேலையின்மை உருவாகி யுள்ளது. வேலையின்மை என்பது பெரும் நெருக்கடி யாக உருவாகியுள்ள அதே வேளையில், சரியான வேலை கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் லட்சக் கணக்கான இளைஞர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட ஒருதலைமுறையே தங்கள் எதிர்காலம் பாழாகிவிட் டது என்ற நிலையில் இருக் கிறார்கள். வேலையின்மை மற்றும் வறுமை ஆகிய இரண்டும் சமூக அமைதியின்மையை ஏற்படுத்துகிறது என்று ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கடந்த ஆண்டு ஆக°டு மாதத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்கும் இதுதான் காரணம் என்பது ஆய்வா ளர்களின் கருத்தாகும். இந்த நிலைமை தொடர்ந்தால் வரும் கோடைக்காலத்தில் ஒரு அமைதியின்மை உரு வாகலாம் என்று எச்சரிக் கிறார்கள். அதிலும், சிறு பான்மையினத்தினர் போன் றவர்களைத்தான் காவல்து றையும் அடக்குமுறையை ஏவிவிட்டு கொடுமைப் படுத்துகிறது. பொதுவாகவே, சிறு பான்மையினர் மத்தியில் காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையின்மை தான் நிலவுகிறது. கடந்த ஆண்டு ஆக°டு 6 ஆம் தேதியன்று 29 வயதான கருப்பர் ஒருவரை காவல் துறையினர் லண்டனில் வடக்குப்பகுதியில் உள்ள டாட்டன்ஹாமில் வைத்து சுட்டுக் கொன்றனர். அத னால் ஆத்திரமடைந்த சிறு பான்மையின மக்கள் நடத் திய போராட்டம், பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி அமைதியின்மையை யும் உருவாக்கியது. ஒற்றுமையே இலக்கு இத்தகைய நடவடிக்கை கள் அழிவைத்தானே தருகி றது என்று ஆய்வாளர்களில் சிலர் போராட்டம் நடத்தி யவர்களிடம் கேட்ட போது, ஒருவழியாக நாங் கள் எல்லாம் ஒன்று சேர்கி றோம் என்ற உணர்வுதான் அப்போது மேலோங்கியது. ஒன்றுசேர்ந்து எங்கள் அதிருப்தியைக் காட்ட ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம் என் றார் 17 வயது இளைஞர் ஒரு வர். அதற்கு முன்பும், மாண வர்களின் கல்விக்கட்ட ணங்களைப் பல மடங்கு உயர்த்தியதால் கிட்டத் தட்ட ஒரு ஆண்டுக்கு மாணவர்கள் கடும் போராட் டங்களை நடத்தினர். அப் போதும் குறிவைத்து மாண வர்களைக் கைது செய்து ஒடுக்க முயன்றதால் அமை தியின்மை ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்ப ரில் நாட்டின் மிகப்பெரிய இரண்டு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்தன. இதில் 20 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஓய்வூ தியச் சீர்திருத்தங்கள் ஊழி யர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளன. இதுபோன்ற பல் வேறு அம்சங்கள் பிரச்ச னையை ஏற்படுத்தக்கூடிய வையாக உள்ளன என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: