இஸ்ரேலியத் தூதரக கார் எரிந்த சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்: ப.சிதம்பரம் புதுதில்லி, பிப். 14- தில்லியில் இ°ரேலியத் தூதரின் காரை குண்டு வைத்து எரித்த சம்பவத்தை நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நபர்கள்தான் செய்துள்ள னர் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தில்லியில் இது தொடர் பாக செய்தியாளர்களிடம் ப. சிதம்பரம் கூறியதாவது: இ°ரேலியத் தூதரக அதிகாரியின் வாகனத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட பயங்கர வாதத் தாக்குதல்தான். மர்ம நபர் ஒருவர் வாக னத்தின் கதவில் வெடிகுண் டைப் பொருத்தி வெடிக்கச் செய்துள்ளார். வெடிகுண் டைப் பொருத்திய 4 அல் லது 5 வினாடிகளிலேயே குண்டை வெடிக்கச் செய் துள்ளனர். குண்டுவெடிப்பு சப்தம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கேட்டுள்ளது. சிசிடிவியில் சரியாக தெரியவில்லை தாக்குதலை நடத்தி யோரை கண்டுபிடிக்க சிசிடிவி காமிராவில் பதி வான காட்சிகளைப் பார்த் தோம். அதில் வெடிகுண் டை பொருத்திய இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரின் தெளிவான உரு வமோ அந்த வாகனத்தின் நம்பர்பிளேட்டோ சரியாக பதிவாகவில்லை. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நப ரைக் கொண்டே தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தாக்குதலில் ஈடுபட் டோரை அடையாளம் காண சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலை வன் மையாகக் கண்டிக்கிறோம். இ°ரேல் தூதரின் வாகனம் மீதான தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கத்தையும் நாங் கள் குறிப்பிட்டு அடையா ளம் காட்டவில்லை. இத் தகைய தாக்குதல்கள் வன் மையாகக் கண்டிக்கத்தக்கது. இ°ரேலைப் போலவே மற்ற நாடுகளுடனும் இந் தியா நல்லுறவையே பேணி வருகிறது. இந்திய மண்ணில் எந்த நாட்டுத் தூதர் மீதும் தாக்குதல் நடத்துவதை ஏற்கவே முடியாது. தாக்கு தலை நிகழ்த்தியது யார் என் பதை கண்டுபிடிப்போம் என்று இ°ரேலுக்கு உறுதி யளித்துள்ளோம். இந்த சம்பவம் தொடர் பாக வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மத் தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் இ° ரேல் தூதர் அலொன் உ° பிஸூடன் பேசியுள்ளனர். போர் வெறியும் கார் எரிப்பும்… (தலையங்கம் – 4)

Leave a Reply

You must be logged in to post a comment.