இருளில் தள்ளிய மின்வெட்டு: தீப்பந்தம் ஏந்தி வாலிபர்கள் போராட்டம் திருப்பூர், பிப். 14 – வரலாறு காணாத மின் வெட்டைத் திணித்து தமி ழக மக்களின் வாழ்வை இரு ளில் தள்ளியிருக்கும் தமிழக அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் திருப்பூர் மாவட் டத்தில் இருபதுக்கும் மேற் பட்ட இடங்களில் வாலி பர்கள் தீப்பந்தம், மெழுகு வர்த்தி ஏற்றி எழுச்சிமிகுப் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலி பர் சங்க திருப்பூர் மாவட் டக் குழுவின் அறைகூவலை ஏற்று, திருப்பூர் வடக்கு மாநகரில் எ°.வி.காலனி, வடக்கு ஒன்றியத்தில் கங்கா நகர், வாவிபாளையம், பிச் சம்பாளையம் புதூர் – ஸ்ரீ நகர், திருப்பூர் தெற்கு மாந கரில் வெள்ளியங்காடு, பூம் புகார், பட்டுக்கோட்டை யார் நகர், காட்டுவளவு, பழகுடோன் கருவம்பாளை யம் உள்பட 12 இடங்களி லும், அவிநாசி முத்துச் செட்டிபாளையம், ஊத்துக் குளி ஒன்றியம் பாரப்பாளை யம், பெரியபாளையம், பாப் பம்பாளையம், புதுப் பாளை யம், மொரட்டுப் பாளை யம், எம்.செட்டி பாளையம் ஆகிய ஆறு இடங்களி லும், திருப்பூர் தெற்கு ஒன் றியம் முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டை முன்பாகவும் இப்போராட் டம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிக ளில் வாலிபர் சங்க நிர்வாகி கள் கைகளில் தீப்பந்தம் மற் றும் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது அமல்படுத்தப் படும் மின்வெட்டு காரண மாக, அனைத்து விதமான தொழில்களும் படுமோச மான பாதிப்பைச் சந்தித்து வருவதுடன், பொது மக்க ளுக்கும் பல்வேறு பாதிப்பு கள் ஏற்படுகின்றன. குறிப்பாக வேலைவாய்ப்பு குறைந்து வருமானம் பாதிப்பதால் வாழ்க்கைச் செலவை ஈடு கட்ட முடியாத நிலை ஏற் படுகிறது. அத்துடன் இருள் நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. வேலைக்குச் சென்று வரும் பெண்கள் மீது வக்கிரபுத்தி படைத்தவர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் நடத் துவது போன்ற சம்பவங்க ளும் நடைபெற்று வருகின் றன. எனவே இந்த பாதிப்புக ளுக்கு முடிவு கட்ட தமிழக அரசு உடனடியாக மின் வெட்டைப் போக்கவும், சீரான மின் விநியோகத்தை வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எழுச்சி முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டங்களில் வாலிபர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் வை.ஆனந் தன், மாவட்டச் செயலாளர் ஆர்.வடிவேல், மாநிலக் குழு உறுப்பினர் ச.நந்தகோபால், தெற்கு நகரச் செயலாளர் சௌ.°டாலின்பாரதி, தெற்கு நகரத் தலைவர் டி.ஜெயபால், வடக்கு நகரப் பொருளாளர் செந்தில், தெற்கு ஒன்றியம் தலைவர் எம். மகேஷ், வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆ.சிகா மணி, தலைவர் பி.மகேஷ்வ ரன், அவிநாசி ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.மோகன், செம்மை பி. மகேஷ், முருகசாமி என்கிற மணி உள்ளிட்டோர் பங் கேற்றனர். இப்போராட்டங்களில் மொத்தம் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: