hனியா இணை பட்டம் வென்றது இந்தியாவின் சானியா மிர்சாவும் ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ரோடியோ நோவாவும் இணைந்து ஆடி, தாய்லாந்தில் நடைபெற்ற பட்டாயா ஓபன் டென்னிஸ் சாம்பியன் இரட்டையர் பட்டத்தை வென்றனர். அவர் கள் சைனீஸ் தைபே வீரர்கள் எச்.சான்- யுங்ஜா சான் இணையை 3-6, 6-1, 10-8 என்ற செட்டுகளில் வென்றனர். போட்டியில் முதல்நிலை பெற்ற இந்திய – ஆஸி. இணை முதல்செட்டை தோற்றது. இரண்டாவது செட் டில் வெஞ்சினம் கொண்டு ஆடி தோல்விக்கு பஞ்சம் தீர்த் துக் கொண்டது. ஆனால் சைனீஸ் தைபே இணை மூன்றா வது செட்டில் சரிமல்லுக்கு நின்று தோற்றது. இரு இறுதிகளில் கேரளா தேசிய இளையோர் வாலிபால் சாம்பியன் போட்டிகளின் இருபாலர் இறுதிப் போட்டிகளில் கேர ளம் இடம்பெற்றுள்ளது. இருபது வயதுக்குட்பட்டோ ருக்கான தேசியப் பட்டப் போட்டிகளின் அரை இறுதிப் போட்டிகளில் கேரள ஆடவர், மகளிர் அணிகள் தமிழக அணிகளுடன் மோதின. ஆடவரில் கேரளம் 23-25, 25-20, 25-23, 21-25, 15-9 என தமிழக ஆடவரை வென்றது. மகளிரில் கேரளம் தமி ழகத்தை 25-18, 25-16, 25-23 எனத் தோற்கடித்தது. இறுதி ஆட்டங்களில் கேரள ஆடவர் அணி உத்தரப்பிரதே சத்தை எதிர்த்தும், கேரள மகளிர் அணி மேற்குவங்கத்தை எதிர்த்தும் ஆடுகின்றன.

Leave A Reply