நாமக்கல் : வீட்டுமனை கோரி சிபிஎம் உண்ணாவிரதம் நாமக்கல், பிப் 13- பள்ளிபாளையம் ஒன்றியம் காடச்சநல்லூர் பகுதியில் வீட்டுமனை மற் றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடக்கோரி மார்க்சி°ட் கம்யூ னி°ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் வீட்டுமனை கேட்டு விண் ணப்பித்துள்ள வீடில்லா ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும். மேம் படுத்தப்பட்ட சுகாதார வளாகங்கள் அமைக்க வேண்டும். சத்யா நகர் பகுதியில் ரேசன் கடைக்கு சொந்த கட்டிடம் அமைக்க வேண்டும். ராமதா° நகரில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடத்தை உடனே திறக்க வேண்டும். முனியப்பன் நகர் மற்றும் மகாலட்சுமி நகர் பகுதியில் காங்கிரீட் சாலைகள் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சி°ட் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் எம்.லட்சுமணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.அசோகன் துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எ.ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப் பினர் எ.ஆதிநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எ°.முத்து, மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாவட்டக்குழு உறுப்பினர் கே. மோகன் மாலையில் பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். இப்போராட் டத்தில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: