விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் தாராபுரம், பிப். 13- தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள பி.ஏ.பி., பாசனப் பகுதிகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகின்றன. இது குறித்து தாராபுரம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளதாவது: தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச்சேர்ந்த பி.ஏ.பி., பாசனப்பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதி உலக வங்கி நிதியுதவியுடன் நீர் வள, நில வள திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவ மழை இல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளின் நலன் கருதி சிறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் அமைக்க குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் என நிர்ணயக்கப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் மானியத்தில் அனைத்து வித பயிர்களுக்கும் ரூ. 43 ஆயிரத்து 816 மானியம் வழங்கப்படுகிறது. கூடுதல் பரப்பில் அமைக்கப்படும் நிலங்களுக்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள பி.ஏ.பி., விவசாயிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தகுந்த சான்றுகளை இணைத்து தாராபுரம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: