மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (நுஞகுடீ) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பட்டதாரிகளிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : சோஷியல் செக்யூரிட்டி அசி°டெண்ட் காலியிடங்கள் : 1867 ( இவற் றில் தமிழகத்திற்கு மட்டும் 383 காலிப்பணியிடங்கள்) இதுமட்டு மன்றி விளையாட்டு வீரர்கள் பிரிவில் மாநில வாரியாக 76 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். சம்பள விகிதம் : ரூ.5,200 – ரூ.20,200 + கிரேடு சம்பளம் கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட் டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டேட்டா என்ட்ரி பணிக்குத் தோதுவாக ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சமாக 5 ஆயிரம் வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கணினி நிறுவனத்தில் கணினிப் பயிற்சி பெற்ற சான்றிதழ் வைத் திருப்பது விரும்பத்தக்கது. வயதுத்தகுதி : 9.3.2012 ம் தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகள், எ°.சி., எ°.டி. முன் னாள் ராணுவத்தினர் போன்றோ ருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வும் உண்டும். தேர்ந்தெடுக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் டேட்டா என்ட்ரி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படு வர். விண்ணப்பக்கட்டணம் : விண்ணப்பதாரர்கள் கட்ட ணமாக ரூ. 315 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், எ°.சி., எ°.டி. முன்னாள் ராணுவத்தி னர் கட்டணமாக ரூ.90 செலுத் தினால் போதும். இதனை °டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏதே னும் ஒரு கிளையில் சலானைப் பூர்த்தி செய்து செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைனில் மட்டுமே விண் ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் நடைமுறையில் உள்ள இ-மெயில் முகவரியைப் பெற் றிருக்க வேண்டும். இணையதளத் திலிருந்து கட்டணத்திற்கான சலானை டவுன்லோடு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். சலானைப் பூர்த்தி செய்யும்போது கொட்டை எழுத்தில் தெளிவாக எழுத வேண்டும். வங்கி அதிகாரி கள் தரும் காப்பியை எழுத்துத் தேர்வின் போது கொண்டு செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர். தேர்வு நடைபெறும் இடங்கள் : தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்க ளில் தேர்வுகள் நடைபெறும். முக்கியத் தேதிகள்: எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 15.04.2012 விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள் : 8.3.2012 ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 9.3.2012 மேலும் தகவல்களுக்கு, hவவயீ://றறற.நயீகiனேயை.படிஎ.in/ hவவயீ://றறற.நயீகiனேயை.உடிஅ/னுசுமூளுளுஹ2011-12.hவஅட

Leave a Reply

You must be logged in to post a comment.