வடவள்ளியில் பேங்க் ஆப் பரோடா கோவை,பிப்.13- பேங்க் ஆப் பரோடா வங்கி தனது 11 வது கிளையை கோவை,வடவள்ளியில் திறந்துள்ளது. அதன் திறப்புவிழா கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. வடவள்ளி மருதமலை மெயின் ரோட்டில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் 11 வது கிளை திறப்புவிழா கடந்த சனிக்கிழமையன்று (பிப்.11) நடைபெற்றது. இவ்விழாவில் வங்கியின் தென்மண் டல பொதுமேலாளர் எஸ்.கல்யாணராமன் கலந்து கொண்டு வங்கி கிளையை திறந்து வைத்தார். இவ்விழாவில், அக்கிளையின் மேலாளர் எ.பால சுப்பிரமணியம் பேசியதாவது,இந்திய நாடு முழுவ தும் 3700 கிளைகளுடனும் வெளிநாடுகளில் 86 கிளைகளுடனும் செயல்பட்டு வருகிறோம். கோவை நகரில் இது 11வது கிளையாகும்.மேலும் வருகிற 16 ம் தேதி சிறு தொழில்களுக்கென்றே பிரத்யோக கிளை ஒன்றையும் துவங்க உள்ளோம் என்றார். விழாவில் தமிழக துணை பொது மேலாளர்கள் ஜே.எஸ்.ஐ.சந்திரன், வி.செல்லையன் மற்றும் வங்கியின் மேலாளர்கள் எஸ்.பி.அசோகன், எம்.பத் மநாபன், சென்சுகிருஷ்ணய்யர், சுசீல்நாக்பால் மற்றும் சி.பி.சி நிறுவனத்தின் டி.பாலசுந்தரம், சாம் ராஜ் குழுமத்தின் ஆர்.ராஜு, கோவை மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.மயில்சாமி, குமுதம் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: