ஸ்ரீரங்கம் அருகே ரூ.100 கோடியில் தேசிய சட்டப்பள்ளி அமைகிறது முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் திருச்சிராப்பள்ளி, பிப்.13- ஸ்ரீரங்கம் தொகுதி திரு வானைக்காவலில் திங்க ளன்று மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங் கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். திங்களன்று சென்னை யிலிருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.30 மணிக்கு புறப் பட்ட ஜெயலலிதா திருச்சி விமான நிலையத்திற்கு மதியம் 1.25மணிக்கு வந்த டைந்தார். திருவானைக் காவலில் நடைபெற்ற விழா விற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீமுரளி தரன் வரவேற்றார். பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடி வுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் ஜெய லலிதா பேசினார். இந்த விழாவில் 7 கோடியே 89லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மணப்பாறை அரசு மருத் துவமனை கட்டிடம், பள்ளி வகுப்பறைகள், குடிநீர் கட் டிடம். கிராமசந்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித்துறை மூலம் கட்டப் பட்ட பாலங்கள், சமுதா யக் கூடங்கள், சாலைகள், ஸ்ரீரங்கம் வட்டம் நவ லூர் குட்டப்பட்டில் சுமார் 25ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 100கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய சட் டப்பள்ளி ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டி னார். பாரதிதாசன் பல் கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த ஜூலை மாதம் துவங் கப்பட்டது. இனாம்குளத் தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்கா லிகமாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரிக்கு நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் திற்கு சொந்தமான இடத்தில் 5கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் சொந்தக்கட்டிடம், அந்தநல்லூர் ஒன்றியம் திருசெந்துறை கிராமத்தில் ரூ.4கோடி மதிப்பீட்டில் குளிர்பதனக் கிட்டங்கியுடன் கூடிய வாழை வணிக வளாகம் உட்பட பல திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். விழாவில் தமிழக அமைச் சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் வி°வநாதன், கே.வி.ராம லிங்கம், முனுசாமி, டாக்டர் விஜய் மற்றும் குமார் எம்பி, எம்எல்ஏக்கள் பரஞ்ஜோதி, மனோகரன், இந்திராகாந்தி, சந்திரசேகர், மேயர் ஜெயா, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் கலந்து கொண் டனர். மாவட்ட வருவாய் அலுவலர் மாணிக்கம் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: