மின்வெட்டை கண்டித்து வாலிபர்கள் ஆர்ப்பாட்டம் திருப்பூர், பிப். 13- மக்களை பாதிக்கும் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேலம்பாளையம் புதுக்காலனி கிளையின் சார்பில் திங்கள் காலை கிளைத்தலைவர் எஸ்.சந்திரமோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கெதிராக முழக்கங்கள் எழுப் பட்டன. நகரச்செயலாளர் இ.ரகுக்குமார் கலந்துக் கொண்டு பேசினார். கிளைச்செயலாளர் பி. மணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: