சிவகாசி, பிப். 13- அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டால் தென் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான சிவகாசி யில் தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி யில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அச்சகங்கள், பாலி பிரிண்டிங், கட்டிங், ஸ்கோரிங் தொழில்கள் மின்தடையால் தற்போது ஸ்தம்பித்துவிட்டன. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர் கள் வேலையிழந்து தவிக் கின்றனர். பகலில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது என்று பல நிறுவனங்கள் தங்கள் வேலை நேரத்தை இரவுக்கு மாற்றின. ஆனால் அதற்கும் வேட்டு வைப்பது போல், தற்போது இரவிலும் மின் வெட்டு அமல்படுத்தப் பட்டு உள்ளது. இதனால் தொழில் நிறுவனத்தினர் செய்வதறியாது தவிக்கின்றனர். தொடர் மின்வெட்டை கண்டித்து சிவகாசி சிறு – குறு தொழில் கூட்டமைப் பினர் திங்களன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டனர். பாலி தீன் பை தயாரிக்கும் நிறு வனங்கள், அச்சகங்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட் டன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் சிவகாசி- திருத்தங்கல் சாலையில் உள்ள மின்வாரிய அலு வலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave A Reply