மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு தமிழகத்தை வரவேற்க நாகை தயாராகிறது நாகப்பட்டினம், பிப்.13- தியாக வரலாற்று பூமியான நாகை யில் பிப்ரவரி 22 முதல் 25 வரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெறு வதையொட்டி, மாநாட்டு வரவேற்புக் குழுக் கூட்டம் நாகை நாணயக்காரத் தெரு திருமண மண்டபத்தில் வெள் ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயற் குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஏ.வி.முருகையன் மாநாட்டுப் பணிகள் பற்றி விளக்கவுரையாற் றினார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து, நாகைமாலி எம்எல்ஏ, மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். காத்த முத்து, டி.கணேசன், கோவை. சுப்பிர மணியன், ஜி.ஸ்டாலின், ஜி. கலைச் செல்வி, சி.வி.ஆர்.ஜீவானந் தம், வீ.அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வரவேற்புக்குழுக் கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசிய தாவது: மிகப்பெரிய தியாக வரலாற்றுத் தளமான நாகையில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் 20வது தமிழ் மாநில மாநாடு, தேச மக்களை ஈர்க்க வல்லதாய் மிகச்சிறப்பாய் நடை பெறவுள்ளது. 45 ஆண்டுகளாகத் தமிழகத்தைத் திமுகவும், அதிமுக வும் மாறிமாறி ஆட்சிபுரிந்துள்ளன. மக் களை ஏமாற்றுவதைத்தவிர, வேறு எந்தக் கொள்கையும் இவர்களிடத் தில் இல்லை. மக்கள் வெறுப்படைந்து ‘நம் பிக்கையளிக்கின்ற ஒரு புதிய – மாற்றுக் கொள்கையுடைய ஒரு இயக் கம் வராதா?’ என்று ஏங்கிக்கொண்டி ருக்கும் இந்த தருணத்தில்தான், நமது மாநில மாநாடு ஒரு மாற்றுப் பாதையை – மாற்றுக்கொள்கையை இந்த மண் ணில் படைக்கவிருக்கிறது. பிப்ரவரி 20 அன்று, 20வது மாநில மாநாட்டைக் குறிக்கும் வகை யில், நாகை அபிராமி சந்நதி அருகில் 20 கொடிகள் ஏற்றிவைக்கப்படுகின்றன. மதுரை தியாகி லீலாவதி, சேலம் சிறைத் தியாகிகள், வெண்மணி தியா கிகள், சின்னியம்பாளையம் தியாகிகள் ஆகிய நினைவிடங்களி லிருந்து சுடர் ஜோதிகள், கொடி, கொடிக்கம்பம், நாகை மாநாட்டை நோக்கிப் பிரச்சாரப் பெரும் பயண மாய் வரவுள்ளன. மாநாட் டின் நிறைவாக பிப்ரவரி 25ல் மாநிலம் முழுவதும் இருந்து வரும் 5000 செந் தொண்டர்கள் பேரணியில் அணி வகுப்பார்கள். பேரணியில் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் பங்கேற் பார்கள். 16ம் தேதி முதல் கலைக்குழுக்கள் நாகை மாவட்டத்தில் பிரச்சாரப் பய ணத்தைத் துவக்குகின்றன. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். மாநாட்டுத்திடல், மேடை மாநில மாநாட்டின் நிறைவாக நடை பெறவுள்ள பொதுக்கூட்டத் தில் லட் சத்துக்கும் மேற்பட்ட மக் கள் கூடும் மாநாட்டுத் திடலையும், பிரம்மாண்ட மான மேடை அமை விடத்தையும் திங் கட்கிழமை காலை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பார்வையிட்டார். நாகை பாலிடெக்னிக் கல்லூரி யின் மிகப்பெரிய மைதானத்தில் மாநாட்டின் கடைசி நாளான பிப்ரவரி 25 அன்று பிரம்மாண்டமான பேரணி சங்கமிக் கிறது. தற்போது இத்திடலைச் சமப் படுத்தும் பணி நடைபெற்றுவரு கிறது. இந்தப் பணியையும் மாநாட்டு மேடை அமைவிடத்தையும் தலைவர்கள் பார்வையிட்டனர். எங்கும் செங்கொடிக் காட்சி மாநாட்டின் மகத்தான பேரணி, பிப்ரவரி 25 அன்று பிற்பகல் நாகை புத் தூரிலிருந்து துவங்குகிறது. அந்த இடத்தையும் கே.பால கிருஷ்ணன் எம்எல்ஏ பார்வையிட் டார். பேரணி துவங்கும் சாலையின் இருபுறமும் அணிவரிசையாய் செங் கொடிகள் பறக்கும் காட்சி கண் ணைக் கவர்வதாய் அமைந்துள்ளது. (ந.நி,)

Leave A Reply

%d bloggers like this: