மதுராந்தகம், பிப்.13- காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந் தகம் அருகே பஞ்சராகி நடு ரோட்டில் நின்ற கார் மீது அரசு பஸ் மோதி ஏற் பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் காய மடைந்தனர். செங்கல்பட் டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் தனது உறவினர்களுடன் மேல் மரு வத்தூர் கோவிலுக்கு சுமோ காரில் சென்றுகொண்டிருந்தார். மதுராந் தகம் அருகே சுக்கில பேட்டை பகுதி யில் வந்துகொண் டிருந்தபோது டயர் பஞ்சராகி கார் நடுரோட்டில் நின்றது. அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து பயங்கர வேகத்தில் கார் மீது மோதியது. இதனால் கம்பியை உடைத் துக் கொண்டு எதிர்சாலையில் பாய்ந் தது. அந்தச் சாலையில் வந்து கொண் டிருந்த மாருதிகார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட் டது. இதில் சுப்பிர மணியம் உட் பட 4 பேர் பலியாகினர்.

Leave A Reply