மக்கள் மன்றம் இதில்தான் தைரியமா? முதல்வர் ஜெயலலிதாவை, “தைரியலட்சுமி” என்று “சோ”வின் அடியொற்றி ரஜினி ஒருமுறை கூறி னார். வேறுசிலரும் கூட அடிக்கடி இதையே கூறுகிறார்கள். அப்படிப்பட்ட தைரியலட்சுமி, மின்வெட்டு இரண்டு மணிநேரம் மட்டுமே என்று அறிவித்துவிட்டு, 8 மணிநேரத்திற்கு கரண்டைப் பிடுங்கு கிறார். பலரும் குய்யோ முறையோ என்று புலம்புகிறார்கள். ஆனால், தைரியலட்சுமி இன்னும் மவுனமாகவே இருக்கிறார். மின்வெட்டை இல்லாமல் செய்வேன் என்று கூறியவர், திமுக ஆட்சியில் கூட இல்லாத வகையில் 8 மணிநேரம் மின்வெட்டு செய்வது மக்களை ஏமாற்றும் செயலன்றி வேறென்ன? – மு.தா.ஜான்சி, பல்லடம் மர்மமாய் இருக்கிறது… பாஜக மத்திய ஆட்சிக்கு வந்தால், இலங்கை மீது போர் தொடுத்து, தமிழீழத்தை அமைத்து விடலாம் என்று வைகோ போன்றவர்கள் கடந்த தேர்தலிலேயே ஆரூடம் கூறினார்கள். நெடுமாறன் உள்ளிட்டோரும் நம்பி னார்கள். மராட் டியத்தில் தமிழர்களை அடித்து விரட் டிய பால்தாக்கரேயை, சீமான் நேரில் சென்று பார்த்தார். தமது ஆதர்ச தலைவர்களில் பால் தாக்கரே யும் ஒருவர் என்று புளகாங்கிதப்பட் டார். இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் கோயில்கள் இடிக்கப்படுவ தாக கூறவே, “இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு” என்ற பெயரில் விஎச்பியும் சவுண்ட் கொடுத்தது. ஆனால், புலிகள் இயக்கத்தை ஆதரித்தது, சோனியா காந்திதான் என்றும், அவர்களை ஒழித்துக் கட்டிய பெருமை ராஜபக்சேக்குத்தான் என் றும் சங்- பரிவாரத்தின் ஊதுகுழலான சுப் பிரமணியசாமி புதிதாக ஒரு குண்டு போட்டுள்ளார். அதுமட்டு மல்ல, புலிகளை ஒழித்ததற்காக ராஜ பக்சேவுக்கு “பாரத ரத்னா” தரவேண் டும் என்றும் புல்லரித்துப் போய் புலம் பியுள்ளார். இந்த சம்பவங்களை எல்லாம் தொகுத்துப் பார்த்தால், யார் நண்பன், யார் எதிரி, யாருக்கு யார் நண்பன், யாருக்கு யார் எதிரி என்று ஒன்றுமே புரியவில்லை. – ஊ.காடுகாவலன், பரமக்குடி இதுவும் உரிமை மீறல்தான் தமிழக சட்டமன்றத்தில் உரிமை மீறல் பற்றி ஆளுங்கட்சி அதிகமாக பேசுகிறது. ஆனால், உறுப்பினர் களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை அமைச்சர்கள் எடுத்துக் கொள்வதும், ஒரு உரிமை பறிப்புதான். உரிமை மீறல்களுக்காக உறுப்பினர்களை கண் டிக்கவும், தண்டிக்கவும் செய்யும் பேர வைத் தலைவர், உறுப்பினர்களின் பேச் சுரிமையைப் பாதுகாக்கும் கடமை யையும் நிறைவேற்ற வேண்டும். நேரத் தைக் கடந்து பேசுவதற்கு உறுப்பினர் களுக்கு அனுமதி மறுக்கும் பேரவைத் தலைவர், உறுப்பினர்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில் அமைச்சர்கள் புகு வதையும் தடுக்க வேண்டும். உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகே அமைச்சர்கள் பதிலளிக்க அனுமதிக்க வேண்டும். அமைச்சர்களின் குறுக்கீடு அவ சியம் எனும் பட்சத்தில், அமைச்சர்கள் எடுத்துக் கொண்ட நேர அளவை, உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சேர்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, “உட்கார், உட்கார்” என்று குரல் எழுப்ப ஆளுங் கட்சி உறுப்பினர்களை அனுமதிப்ப தானது, பேரவைத் தலைவர் தனது உரி மையை இழப்பதும் ஆகும். – சிவசக்தி ராமசாமி, உடுமலை இழுத்தடிக்கப்படுவது ஏன்? தூத்துக்குடி மாவட்டம், தெய்வச் செயல்புரம் நிலமோசடி(900 ஏக்கர்) மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? என்று சட்டமன்றத்தில் கே.பால கிருஷ்ணனின் கேள்விக் கணையைத் தீக்கதிரில் கண்டேன். அதே தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா ஆழ்வார் திரு நகரி குருகூர் நங்கை முத்தாரம்மன் நந்தவனத்தை, போலி ஆவணம் தயா ரித்து கூட்டுச்சதி செய்து, ஒருவருக்கு பதிவாளர் அலுவலகத்தில் அட மானம் எழுதிக் கொடுத்துள்ளனர். இதுபற்றி அரசு அதிகாரியான கோயில் தக்கார், தக்க ஆதாரங் களுடன் ஆழ்வை காவல் ஆய்வா ளரிடம் புகார் கொடுத்தார். விசாரணை முறையாக இல்லாததால் நீதிமன்றம் சென்றார். முதல் தகவல் அறிக்கை பதி வானது. ஆனால், அதைத்தொடர்ந்து நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரை வந்தும், மோசடிப் பேர் வழிகளின் அரசியல் செல்வாக்கால் ‘குற்றப்பத்திரிகை’ தாக்கல் இல்லாமல் இழுத்தடிக்கப்படுகிறது. நியாயம் கேட்பவர்களை மோசடிப் பேர்வழிகள் மிரட்டுகிறார்கள். ஆட்சி மாறினாலும், அதிகாரிகள் ஆதரவு, அரசியல் செல்வாக்கு இருந் தால் நிலமோசடியாளர்களை என்ன செய்ய முடியும்? – தி.சேஷாத்திரி, ஆழ்வார் திருநகரி — அட! ஒழுக்கச் சீலர்களா…? கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா அண்மையில் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அரைக்கால் டவுசருடன் காட்சியளித்தார். அத்வானி, வாஜ்பாய், மோடி என பலரும் இப்படி மதவெறி அமைப்பின் கூட்டத்தில் சீருடையுடன் கலந்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால், ஒழுக்கமாக நேர்மையாக வாழ்வது எப்படி என்பதை போதிக்கத்தான் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்துகிறது என்று பலமுறை அளந்து விட்டிருக்கிறார்கள். ஆனால், பாஜக அமைச்சர்கள், கர்நாடக சட்டமன்றத்தில் பார்த்த பலான படங்கள், இந்த ஒழுக்கங்கெட்டவர்களை உரித்துக் காட்டி விட்டன. ஏற்கெனவே, பங்காரு லட்சுமணன், கத்தை கத்தையாக லஞ்சத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டது; எடியூரப்பாக்களும், ரெட்டிகளும் சுரங்கங்களை துடைத்து எடுத்தது, மத்தியப் பிரதேச முதல்வர் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டது.. என்று இவர்களின் “நேர்மை”க்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. இந்த லட்சணத்தில், ஆர்எஸ்எஸ் கூட்டமாம்.. அங்கு ஒழுக்கத்திற்கான- நேர்மைக்கான பாடமாம்… ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? -இரா.பாலச்சந்திரன், திருவான்மியூர்

Leave A Reply

%d bloggers like this: