இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா திருப்பூர்,பிப்.13- திருப்பூர், வேலம்பாளையம் நகரம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் ஞாயிறன்று மக்கள் ஒற்றுமை விளை யாட்டு விழா ஆத்துபாளையம் ரோட்டில் நடைபெற்றது. இதில், ஓட்டபந்தயம், தடைஓட்டம், சட்டி உடைத்தல், மியுசிக் சேர், கயிறு இழுத்தல், குழந்தைகள் நடனம், கட்டுரை, ஓவியம், கவிதை, மாறுவேடம், என சிறியவர் முதல் பெரியவர் வரையிலான பல்வேறு போட்டிகள் நடைபெற் றன. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், நகர செயலாளர் கே.ரங்கராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணண், மாவட்டச் செயலாளர் ஆர்.வடிவேல், நகர தலைவர் அ.மணவாளன், நகர செயலாளர் இ. ரகுக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் திருப்பூர் கலைக் குழுவின் தப்பாட்டமும், பாரதி சிலம்பாட்டக் குழுவின் நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. இதில் மக்கள் அனைவரும் உற்சாகமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: