பொள்ளாச்சியருகே இரண்டடி நிலத்துக்காக இரட்டைக்கொலை- கொலையாளி கைது பொள்ளாச்சி, பிப். 13- கோவை மாவட்டம் பொள்ளாச்சியருகே, இரண்டடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ஏற் பட்ட முன்விரோதம் காரணமாக, தாயும் மகளும் வெட்டிக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சுப்பேகவுண்டன் புதூரில் வசிப்பவர் முருகன். விவசாயக்கூலி வேலை செய்துவரும் இவரது மனைவி பழனியம்மாள்(55), மூத்தமகள் மகுடீஸ்வரி(35), இளையமகள் ஜோதிமணி.(30), இவர்களுக்கு சொந்தமாக வீட்டின் அருகே உள்ள நிலத்திற்கு அடுத்தபடியாக, ராஜீவ்காந்தி (28) என்பவருக்கு சொந்தமாக சிறிது நிலம் இருந்து வருகிறது. ராஜீவ்காந்தியின் இடத்தில், சுமார் இரண் டடி நிலத்தை முருகன் குடும்பத்தினர் ஆக்கிரமித்து விட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ராஜீவ்காந்தி அடிக்கடி முருகன் மற்றும் அவரது மனைவி, மகள்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இரு குடும் பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. கடந்த வாரமும் இதேபோல இடம் தொடர்பாக வாய்த்தகராறும், கைகலப்பும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முருகன்,அவரின் மனைவி பழனியம்மாள் ஆகியோர் மீது, ராஜீவ்காந்தி கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று-11.2.12 இரவு-இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, பழனியம்மாளும், அவருக்குத்துணையாக ஜோதிமணியும் வீட்டின் அருகேயுள்ள,புதருக்கு அருகில் சென்றுள்ளனர். இதனைக் கவனித்த ராஜீவ் காந்தி, தனது வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, அவர்களின் பின்னால் சென்று, பழனியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைக்கண்டு அலறிய ஜோதிமணியையும் ராஜீவ்காந்தி வெட்டினார். இதில் கழுத்து, கைகள், முகம், வயிறு என்று பல இடங்களில் வெட்டுப்பட்டு துடித்த பழனியம்மாளும், ஜோதிமணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதிக்கு ஓடிவந்த மூத்தமகள் மகுடீஸ்வரியையும்,ர hஜீவ்காந்தி ஆத்திரத்துடன் வெட்டியுள்ளார். இரத்தம் பெருக்கெடுத்தோட சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்த மகுடீஸ்வரியும் இறந்துவிட்டதாக எண்ணி, ராஜீவ்காந்தி அங்கிருந்து தப்பித்து ஓடி தலைமறைவானார். தொடர்ந்து பெண்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது இரத்தவெள்ளத்தில் கிடந்த மூன்று பெண்களில், மகுடீஸ்வரி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்ட பொதுமக்கள், அவரை உடனடியாக மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் சுப்ரமணி உள்ளிட்ட ஆனைமலை போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பழனியம்மாள் மற்றும் ஜோதிமணி ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.உமா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார். கொலையாளியான ராஜீவ்காந்தி, ஏற்கனவே ஒருவரை கொலை செய்து விட்டு தண்டனை பெற்றவர் என்பதும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்தான் விடுதலை பெற்றவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து டி.எ°.பி. பழனிச்சாமி உத்தரவின் பேரில் இன்°பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ராஜீவ் காந்தியை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி ராஜீவ் காந்தியை தனிப்படையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: