புதுச்சேரி, பிப்.13- புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகம் உள்ளது. இப்பல்கலை கழகத்தில் கேரளா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 32 மாநிலங் களையும் சேர்ந்த 4ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி உயர்கல்வி படித்து வருகின்றனர். மாண வர்களுக்கு 9விடுதிகளும், மாணவிகளுக்கு 7விடுதி களும் உள்ளன. கடந்த இரண்டு வருடமாக மாணவர் களுக்கு வழங்கபடும் உணவு தரமற்றதாக உள்ளது என்று புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்று கிழமை மதியம் அமுதம் மெ° சில் வழங்கபட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்தது. இதனையொட்டி இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் அரிகரன், செயலாளர் ஆனந்து உள்ளிட்ட பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் னர் பல்கலைக்கழக இரண் டாம் வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கோரிக் கைகளை ஏற்றுகொள்ள மறுத் ததால் போராட்டம் தோடர்நது திங்களன்று மாணவர்கள் பல் கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். உடனே நிர்வாகம் போலீசாரை குவிந்தது. இதனால் பதட்டச் சூழல் ஏற் பட்டது. இப்போராட்டத்தையொட்டி இரண்டு நாளும் மாணவர்கள் தாங்களாவே சமைத்து சாப் பிட்ட சம்பவமும் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. பேச்சு வார்த்தை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தில்லி ஜவஹர் லால் நேரு ஜெ.என் பல் கலைக்கழகத்தில் உள்ளதைப் போல் மாணவர்களே தங்க ளுக்கான உணவுவிடுதிகளை நடத்திக் கொள்ள பல்கலைக் கழகம் அனுமதிக்க வேண்டும்; மாணவர் பேரவைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என் றனர்.இக்கோரிகைகளை பதி வாளர் லோகநாதன் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.இதனை அடுத்து திங்களன்று மாலை 5 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தரேன், போராட் டத்தில் ஈடுபட்டிருந்த மாண வர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.உடனே சம்பந் தபட்ட விடுதியில் தரமாண உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாவும்,தலைமை வார்டனை உடனடியாக மாற் றவும்,விடுதியில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித் தார். இரண்டு நாள் போராட் டத்தையொட்டி மாணவர்கள் கோரிக்கையான விடுதியினை மாணவர்கள் நடத்தி கொள் ளவும், மாணவர்பேரவைத் தேர் தலை நடத்துவதற்கு அனும திக்காத நிலையில், மேற் கண்டகோரிக்கைகளுக்காக துணைவேந்தரின் உறுதி மொழியை ஏற்று மாணவர் கள் இப்போராட்டத்தை தற் காலிகமாக தள்ளிவைப்பதாக பத்திரிக்கையாளரிடம் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: