சம்ஜவுதா ரயில் விபத்து குற்றம்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ்காரர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் புதுதில்லி, பிப். 13 – சம்ஜவுதா குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் தொண்டர் கமல்சவுகானை தேசிய புல னாய்வுக் கழகம்(என்ஐஏ) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. ஹரியானாவில் உள்ள திவானா என்ற இடத்தில் 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவைத்து தகர்க்கப்பட் டது. தில்லி – லாகூர் இடை யே ஓடும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் குண்டுவெடிப்பில் சிதறின. 68 பயணிகள் கொல்லப்பட் டனர். பயங்கர சதிவேலை செய்ததில், முக்கிய நபரான கமல் சவுகான், மத்தியப் பிரதேசம், இந்தூர் மாவட் டத்தில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப் பைச் சேர்ந்தவர். காவல் துறையினர் விசாரணைக் குப்பின்னர், சவுகானை தங் கள், கட்டுப்பாட் டுக்கு கொண்டுவந்த என்ஐஏ விசாரணை செய்ததில், அந்த சந்தேக நபர், குண்டுவெடிப் புக்கு முக்கியக் காரணம் என்பது அடையாளம் காணப்பட்டது. சம்ஜவுதா எக்ஸ்பிரசில் கமல்சவுகா னும், மற்றொரு நபரும் குண்டு வைத்ததாக சந் தேகிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு வழக் கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள ராம்ஜி கல் சங்க்ரா மற்றும் சந்தீப் பாங்கேவுக்கு கமல் மிக நெருக்கமான உதவியாளராக இருந்தார். மேற்கூறிய 2 நபர்களும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.10லட் சம் பரிசு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை என்ஐஏ அறிவித்துள்ளது. சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்கு ஏற்கெனவே சுவாமி அசீமானந்த சாத்வி பிரக்யா, சுமிஜோஷி (தற் போது இறந்துவிட்டார்), சந்தீப் டாங்கே, லோகேஷ் ஷர்மா மற்றும் ராமச்சந்திர கல் சன்க்ரா என்ற ராம்ஜி ஆகியோர் காரணம் என தேசிய புலனாய்வுக் கழகம் குற்றம்சாட்டியிருந்தது. கமல் சவுகானிடம் நடத் திய விசாரணையில் கிடைத் தத் தகவல் அடிப்படையில் சதிகாரர்களை பிடிப்போம் என என்ஐஏ அதிகாரிகள் கூறினர். கைதான கமல் சவுகான் நீண்டகாலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 2வது நபர் கமல்சவுகான். ஏற் கெனவே 2010ம் ஆண்டு இந் துத்வா தொண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக நடந்த சதிக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். 68 பேரைக் கொன்ற குண்டுகளை தலைமறை வாக உள்ள இந்துத்வா தீவிர வாதி சந்தீப் டாங்கே (ஆர் எஸ்எஸ் தலைவர்) தயாரித் தார் என புலனாய்வா ளர்கள் தெரிவித்தனர். சம்ஜவுதா ரயில் குண்டு வெடிப்புக்கான திட்ட விவரம் குஜராத்தை மைய மாகக் கொண்ட ஆர்எஸ் எஸ் தொடர்புடைய வன வாசி கல்யாண் ஆசிரமத் தின் தலைவர் நபாகுமார் சர்க்கார் உருவாக்கியது ஆகும்.

Leave A Reply

%d bloggers like this: