பிப்ரவரி 28 அகில இந்திய வேலை நிறுத்தம் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் முழு ஆதரவு புதுதில்லி, பிப். 13- பிப்ரவரி 28 அன்று தொழிற்சங்கங்கள் நடத்த வுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கமும் முழு ஆதரவினைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் பொதுச் செயலாளர் கே.வரதராசன், அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஏ. விஜயராகவன் கூட் டாக வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: 2012 பிப்ரவரி 28 அன்று தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்த அறைகூவல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். ஏனெனில் வர லாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் நவீன தாரா ளமயக் கொள்கைகளுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங் கங்களும் ஒன்றிணைந்து இவ்வாறு அழைப்பு விடுத் திருக்கின்றன. ஆளும் வர்க் கங்களின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அரசியல் கட்சிமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு நின்று, நாட் டில் உள்ள அனைத்துத் தொழிலாளி வர்க்கமும் ஒன்றுபட்டு நின்று, விரிந்த அளவில் இவ்வாறு அறை கூவல் விடுத்திருக்கிறது. தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ள பிரதானக் கோரிக்கைகள், விவசாயி கள், விவசாயத் தொழிலா ளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பொருத்தமுடையவை களேயாகும். விலைவாசி யைக் கட்டுப்படுத்த வேண் டும், வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக் கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகு பாடுமின்றி அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்த வேண்டும். முன்பேர ஊக வர்த்தகத்தைத் தடைசெய்ய வேண்டும் ஆகியவை மட்டு மல்ல, விவசாயத் தொழிலா ளர்கள் உட்பட முறைசா ராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒருங்கி ணைந்த மத்திய சட்டம் வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும், வேலை உத்தரவாதச் சட்டம் தொழிலாளர் நலச் சட்டத்துடன் இணைக்கப் பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் தொழிலா ளர் வர்க்கத்தின் கோரிக்கை கள் மட்டுமல்ல, விவசாயி களின் விவசாயத்தொழி லாளர்களின் கோரிக்கை களுமாகும். எனவே இப்போராட் டத்தில் தொழிலாளர்களு டன் விவசாயிகளும் விவ சாயத் தொழிலாளர்களும் கைகோர்ப்பார்கள். பொதுத்துறை நிறு வனங்களை, குறிப்பாக மின் சாரம், ரசாயன உரம் முத லான துறைகளைத் தனியா ருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகள் தொழிலாளர் களுக்கு மட்டுமல்ல, விவ சாயிகள் விவசாயத் தொழி லாளர்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவைகளாகும். பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி களை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மூடப் பட்ட ரசாயன உரப் பிரிவு களையும் இதர பாரம்பரி யத் தொழில் பிரிவுகளையும் மீண்டும் திறந்திட வேண் டும். மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதிய மாக நிர்ணயிக்கக்கூடிய வகையில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் திருத்தப் பட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் கோருகின்றன. இக்கோரிக்கைகளுடன், தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ள கோரிக்கைகளுக்காகவும் வரும் பிப்ரவரி 28 அன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர் களும் பெருந்திரளாகப் பங் கேற்று வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என் றும், இதனையொட்டி ஆத ரவு இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் கிளை கள் அனைத்தையும் விவசா யிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அந்த அறிக் கையில் அவர்கள் கூறியுள் ளனர். (ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: