பிப்.28. வேலை நிறுத்தம் : முழுமையாக பங்கேற்க கே° விநியோக தொழிலாளர்கள் முடிவு உடுமலை, பிப். 13- உடுமலையில் கே° விநியோகிக்கும் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கூட்டம் ஆர்.ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு, உறுப் பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், பிப்.28ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக கே. அருணகிரி, செயலாளராக எம்.தியாகராஜன், பொருளாளராக எ°.நாகராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும். துணை நிர்வாகிகள் பி.ஆறுமுகம், ஆர்.சந்திரகுப்த காந்தி மற்றும் ரவி உள்ளிட்ட திரளானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: