பிப்.28 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பு சென்னை, பிப். 13 – சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியக் குழுவால் வரையறுக்கப் பட்ட ஊதியம், சட்டப்பூர் வமான மாதாந்திர ஓய்வூதி யம் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றிட அரசுக்கு வலியுறுத்தி பிப் ரவரி 28ல் நடைபெறக்கூடிய அகில இந்திய வேலை நிறுத் தத்தில் சத்துணவு ஊழியர் கள் பங்கேற்பது என தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங் கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற் குழு கூட்டம் 11ம் தேதி ஈரோடு பூமாலை வணிக வளாகத்தில் மாநிலத் தலை வர் கே.பழனிச்சாமி தலை மையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் டி.ஆர். மேகநாதன் அறிக்கை சமர்ப் பித்துப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஈரோடு மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மாநில மகளிர் துணைக்குழு உறுப் பினர் பிரசன்னா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சட்டப்பூர்வமான மாதாந் திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். விலை உயர்வுக் கேற்ப உணவு தயாரிப்பு செலவினத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். காலிப்பணியிடங்களில் நியமனம் மேற்கொள்ளும் முன்பாக ஊழியரின் விருப்ப மாறுதல், தகுதியுள்ள சமை யலர் மற்றும் சமையல் உத வியாளர்க்கு அமைப்பாள ராக பதவி உயர்வு, சமையல் உதவியாளர்க்கு சமையல ராக பதவி உயர்வு, கருணை அடிப்படையிலான வாரி சுக்கு பணி நியமனம் ஆகிய வைகளை நிறைவு செய்து விட்டு, எஞ்சியுள்ள காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் மேற்கொண்டு அரசு ஆணையை அமல் படுத்திட வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 500 ஐ மிகை ஊதியமாக (பொங் கல் போனஸ்) ஓய்வு பெற்ற மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வழங் கிட வேண்டும். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளை தமி ழக முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பிப்ரவரி 28ல் நடைபெறக்கூடிய அகில இந்திய வேலைநிறுத்தத்திற் கான ஆயத்த இயக்க நடவ டிக்கையிலும், வேலை நிறுத்தத்திலும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பங்கேற்பது என்று கூட்டம் முடிவு செய்தது. முன்னதாக கண்ணன் வரவேற்றார். ஆர்.ஆய்யம்மாள் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: