“அன்புள்ள தாத்தூ! கடைசியில் உன்னை ஒருமையில் விளிக்க அனுமதி கொடு. இதுவரை நாம், ஒருவரையொருவர் ‘நீங்கள்’ என்று பன்மையில் அழைத்து வந்தோமே, அதனால் சொல்லுகிறேன். தாத்தூ இந்தக் காலத்தில் சொந்த விவகாரங்கள் சில வேளைகளில் பொது நலனுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒரேயடியாக அப்படிச் சொல்லி விடவும் முடியாது. அப்படி செய்வது தேவையும் இல்லை. ஏனெனில் தனிப் பட்ட முறையில் என்னை திருப்திப்படுத் திக் கொள்ளாமல் பொதுநலத்துக்காக தேவையான வகையில் போராட என் னால் முடியாது. சொந்த நலத்தை நிறை வேற்றிக்கொள்வதும் பொதுநலத்தைப் போராடி பெறுவதும் அறிவார்ந்த விதத் தில் ஒருங்கிசைவுடன் இணைக்கப்பட வேண்டும்…………………………………………… தாத்தூ! நிறைய எழுதுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இப்போதோ உன்னுடன் முடிவின்றி பேசிக்கொண்டே இருக்க ஆசையாய் இருக்கிறது. என்ன செய்வது? இந்த நாட்களில் எனக்கு என்னையே அடையாளம் தெரிய வில்லை. நான் சிந்தனை செய்வதும் கனவு காண்பதும் உன்னைப் பற்றித் தான். சாவைப் பற்றி நான் நினைப்பதே இல்லை. நம் அன்புக்குரியவர் இருக்கி றார் என்பது தெரிந்தபின் சாவது அவ் வளவு பயங்கரமாய் இல்லை. ஆனால் இவ்வாறு இல்லாவிட்டால் உள்ளத்தில் வெறுமையை உணர்ந்திருப்பேன்……. …………………………………………………………………………………. தாத்தூ! உனக்கும் எனக்கும் இடையே சமத்துவம் ஒருபோதும் இருக்கவில்லை. நான் போதனை ஆசிரியன் போலவும் நீ மாணவி போல வும் எப்போதும் இருந்து வந்தோம். அட இந்தப் பேச்சு போதும்! தாத்தூ என் உணர்வுப் பட்டகத்திலும் எனது உலகக் கண்ணோட்டத்திலும் மாறவேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் என் காதலி! என் நண்பனின் இடத்தையும் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்துப்படி இது எல்லாவற்றிலும் முக்கியமானது. நீயே என் காதலி! நீயே என் நண்பன்! அன்புள்ள தாத்தூ! இதைப் பெத் ரோகிராவில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் இருந்தபடி எழுதுகிறேன். நாளையே நான் சுட்டுக் கொல்லப்பட லாம். எனக்கு சிறிதும் அச்சமில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன். அன்புடன் உல்லுபீ புய்னாக்°கி” இந்தக் கடிதம் எழுதிய சில நாட்களில் உல்லுபீ எதிரிகளால் கொல்லப்பட்டார். சோவியத் நாட்டைப் பாதுகாப்பதற்காக போர்க்களம் சென்ற உல்லுபீ, தன் காத லிக்கு எழுதிய கடிதங்கள் புரட்சியில் இளை ஞர்கள் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள் ளது. அந்தக் கடிதங்களில் ஒரு இடத்தில் உல்லுபீ குறிப்பிடுவான்,“காதல் ஒரு போதும் பொறுப்பற்றதாக இருக்க முடி யாது”. ஆம் இந்தக் காதலர் தினத்தில் நாம் சொல்ல விரும்பும் செய்தி அதுதான். காதல் உலக இயற்கை. காதலையும் வீரத்தையும் ஒதுக்கிவிட்டால், வாழ்க்கை யில் பொருளில்லை. தமிழர் பண்பாட்டின் குறியீடாக காதலையும் வீரத்தையும்தான் போற்றுவர். தமிழர் இலக்கியங்களில் காதல் எப்போதும் இரண்டறக் கலந்தே இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். ‘வசந்தவிழா’ என்கிற பெயரில் சித்திரை மாதம் முழு நிலவன்று ஆட்டமும் பாட்டுமுமாய் காதலைக் கொண்டாடிய பாரம்பரியத்திற்கு உரியவர்கள் நாம். ஆனால் சாதி வெறியும், மத வெறியும் கோடாரியாய் காதலைப் பிளக்க கதைக ளில் காதல் வாழ்ந்தது. ஊரில் சேரியில் காதலர் சாய்க்கப்பட்டனர். பாரதியும், பாரதிதாசனும், பட்டுக்கோட் டையும் தமிழ்ஒளியும் காதலைப் போற்றி னர். “ஆதலினால் காதல் செய்வீர்” என பாரதி அறைகூவலே விட்டான். ஏனெனில் காதலினால் சாதி போகும். காதலினால் மதவெறி போகும். காதலினால் பகை போகும். காதலினால் மானுடம் உய்யும். இந்தக் காதல் உலகம் முழுமைக்கா னது. பிப்ரவரி 14ஐ உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடுகின்றனர். இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதை இருக்கிறது. எது சரியென்பதை கூற முடியாது. ஆயினும் பொதுவாக எல் லோரும் நம்பும் செய்தி ஒன்று உண்டு. கி.பி.270ஆம் ஆண்டு ரோமை இரண் டாம் கிளாடிய° ஆண்டு வந்தார். அவர் யுத்தப் பிரியர். யுத்தத்துக்கு இளைஞர்கள் தேவை என்பதால் திருமணத்திற்குத் தடை விதித்தார். இதை எதிர்த்து பாதிரியார் வேலன்டைன். காதலர்களுக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்தார். இதை அறிந்த மன்னர் அவருக்கு பிப்ரவரி 14 அன்று மரண தண்டனையை நிறைவேற்றி னார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 காதலர்கள் கொண்டாடும் தின மானது. தண்டனை கருவியாய் இருந்த சிலுவை ஏசுவை தாங்கிய பின், வணக்கத் திற்குரிய புனிதச் சின்னமாய் மாறியதைப் போல, வேலன்டைன் பாதிரியாரின் உயிர்த் தியாகம் காதலுக்கு உயிர் கொடுத்தது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாய் வெவ்வேறு நாட்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த 20ஆண்டுகளில் இந்த நாளுக்கு வந்திருக்கிற மவுசு இதற்கு முன் எப்போதும் இல்லை. ஏன்? எந்தப் பண்டிகை ஆனாலும், விழா ஆனாலும் அதன் பின் ஒரு வர்த்தக நோக் கம் இணையும்போதுதான் அது வேகம் பெறுகிறது. இது தீபாவளிக்கும் பொருந்தும். வேலன்டைன் தினத்துக்கும் பொருந்தும். வாழ்த்து அட்டைகள், ரோஜாப்பூ, பரிசுப் பொருள்கள் என இந்த நாளில் விற்பனை பெருமளவு நடக்கிறது. இதனால் பெருமளவு விளம்பரம் செய்யப்படுகிறது. காதலும் வியா பாரிகளின் கைச்சரக்காக மாற்றப்படுகிறது. இந்த வியாபாரக் காதலை எதிர்ப்பார்களா னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்து மதவெறியர்கள் மட்டுமல்ல எல்லா மத வெறி யர்களும் காதலர் தினத்தை கண்ணை மூடி எதிர்க்கிறார்கள். பண்பாட்டு சீரழிவு என்று கூப்பாடு போடுகிறார்கள். நாம் அவர்களைக் கேட்கிறோம். நீங்கள் எதிர்ப்பது காதலையா? காதலர் தினத் தையா? காதலை மனித குலத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. இந்த பிற்போக்காளர்கள் மதம், சாதி, வர்ணம், குலம், கோத்திரம், சடங்குகள், சம்பிரதாயங்கள், வரதட்சணை போன்ற வற்றை பாதுகாக்கத் துடிக்கிறார்கள். பெண் ணடிமைத் தனத்தை பாதுகாக்க விழைகி றார்கள். ஆதலால் காதல் திருமணம் பெரு கினால், தங்களின் நோக்கம் பாழ்பட்டுவிடு மெனத் துடிக்கிறார்கள். கேட்டால் நாங்கள் காமவெறியை எதிர்ப்பதாக – ஆபாசத்தை எதிர்ப்பதாக மேல்பூச்சு பூசுகிறார்கள். உண்மை அதுவல்ல. சமத்துவத்தை அவர் கள் சாய்க்க விரும்புகிறார்கள் என்பதே நிஜம். அதே சமயம் அவர்களுக்கும் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கும் சேர்த்தே ஒன்று சொல்லிக்கொள்வோம். காதலும் காமமும் ஒன்றல்ல. காமம் மட்டுமே காதல் அல்ல. தமிழ் சினிமாவில் காட்டப் படுவதெல்லாம்- ஊடகங்களில் சித்தரிக்கப் படுவதெல்லாம் காதலல்ல. காதலென்பது ஒருவரையொருவர் உள்ளன்போடு புரிந்து கொள்வது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது. இணைந்து வாழ்வது. இந்தக் காதலில் குரோதம் கிடையாது. அன்பு மட்டுமே எப்போதும் பொங்கி வழியும். இந் தக் காதல் பொறுப்பற்றதாக ஒருபோதும் இருக்க முடியாது – அது காதலாக இருக்கு மானால். தன்னைச் சுற்றி நடப்பவற்றை கண்டும் காணாமல் ஒருபோதும் இருக்க முடியாது. வாழ்க்கையை சமூகத்தை அறி வியலாய் புரிந்துகொள்ளவும்; வெள்ள அன் பால் அணைத்துக்கொள்ளவும் யாரால் முடிகிறதோ அவர்கள் மட்டுமே உண்மை யான காதலர்கள். காதலின் பொருள் அர்ப்பணிப்பு. காதலின் பொருள் சமத்துவம். காதலின் பொருள் அமைதி. காதலின் பொருள் முன்னேற்றம். ஆகவேதான் புரட்சியாளர்கள் காதலைப் போற்றினார்கள். மரணத்தின் வாயிலிலும் காதலை கைத்தலம் பற்றினார்கள். பகத் சிங்கூட குறிப்பிட்ட சூழலால்தான் தான் காதலிக்கவில்லை என்றும், ஆனால் தான் எப்போதும் காதலின் எதிரி அல்ல என்றும் பகிரங்கமாகவே கூறினார். கம்யூனி°ட் இயக்கத்திலும் தோழர் என்.சங்கரய்யா – நவமணி, ஆர். உமாநாத் – பாப்பா, கே. ரமணி – சியாமளா, என். வரத ராஜன் – ஜெகதா, பிரகாஷ்காரத் – பிருந்தா என காதல் திருமணம், சாதி மறுப்புத் திரு மணம் செய்துகொண்டவர்கள் பட்டியல் நீளும். இப்போதும் அந்த பாரம்பரியம் தொடர்கிறது. சாதியற்ற, மதவெறியற்ற, ஆணாதிக்கம் இல்லாத, மூட நம்பிக்கைகளில்லாத, அறி வும் அன்பும் ஆட்சி செலுத்துகிற பொறுப்பு மிக்க காதலுக்கு நல்வரவு கூறுவோம். காலமெல்லாம் காதல் வாழ்க! – சு.பொ. அகத்தியலிங்கம்

Leave A Reply

%d bloggers like this: