பள்ளிகளில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சு உதகை, பிப். 13- அனைத்து கல்வி நிலையங்களிலும் புகையிலை கட்டுப்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என உதகை நகராட்சி சுகாதார அலுவலர் பி.பி.பானுமதி தெரிவித்துள்ளார். உதகையில் வெள்ளியன்று நகராட்சி சுகாதாரப் பிரிவின் சார்பில் ‘ சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பானுமதி பேசும்போது, அனைத்து கல்வி நிலையங்களிலும் குறிப்பாக பள்ளிகளில் புகையிலை கட்டுப்பாட்டுக் குழுவை ஏற்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களைச் சுற்றி 100 யார்டுக்குள் உள்ள கடைகளில் சிகரெட் மற்றும் இதர புகையிலைப்பொருட்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் மறைவாகவும், வெளிப்படையாகவும் புகையிலை விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை நிலையான சட்டதிட்டங்களை வகுப்பதன் மூலமே ஒழுங்குப டுத்த முடியும். மேலும் பொதுஇடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கும் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் போதுமானதாக இல்லை. சிறிய அளவிலான இடங்களில், புகைப்பிடிப்பதால் ஏற்படும் புகையால் குழந்தைகளுக்கு பல்வேறு விளைவு கள் ஏற்படுகிறது என்று கூறினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் புள்ளிவிவரத்தின் படி, இந்தியாவில் தினந்தோறும் 2500 பேர் இறக்கிறார்கள். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கே.சிவக்குமார் தெரிவிக்கையில், அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால், இம்மலையரசி உதகையை புகையிலை இல்லா ஊராக மாற்ற முடியும். மேலும், புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நகரின் முக்கியமான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும். இதன்மூலம், பொதுஇடங்களில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்படும் என்று கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: