தொழில் நெருக்கடி பாதி, மின்வெட்டு மீதி! உதிரிப் பாட்டாளிகளாகும் சிறு, குறு முதலீட்டாளர்கள்!! தினசரி 10 மணி நேரத்திற்கும் மேல் தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்களில் மின்வெட்டு, சதா எந்திர ஓசைகளுடன் காலம் தள்ளும் இந்நகரங்கள் எப்படி இந்த நெருக்கடியை எதிர்கொள்கின்றன? பிழைப்பு தேடி லட்சக்கணக்கில் குவிந்துள்ள ளிமாநில, மாவட்டத்தொழிலாளிகள், என்ன பாடுபடுகின்றனர்? கோவை மாநகரின் இன்ஜினியரிங், பஞ்சாலை, விசைத்தறி தொழில்களும் ஆட்டோ மொபைல், வார்ப்படம், பவுண்டரிகள், லேத் பட்டறைகள், பிளாஸ்டிக், வெல்டிங், கிரில் ஒர்க்ஷாப்கள், கியர்பாக்ஸ், பம்பு உற்பத்தி, மோல்டிங், சிஎன்சி, விம்சி மில்லிங், கிரைண்டரிங் காஸ்டிங் ஒர்க்ஷாப்கள், தங்கநகைப்பட்டறைகள், கிரைண்டர், மிக்சி உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள் என நூற்வனங்களும் இவற்றை நம்பியுள்ள பல இலட்சக்கணக்கான தொழிலாளரும் தங்கள் வாழ்வாதாரமே பறிபோகும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களின் அன்றாட ஜீவ மரணப்போராட்டத்தை சொல்லிமாளாது. தலைதப்பினால் போதும்! கடந்த எட்டு ஆண்டுகளாக லேத் பட்டறை நடத்தி வந்த, ஜாப் ஒர்க் மூலம் வாரம் 20 தொழிலாளிகளுக்கு வேலை வழங்கி தானும் ஜீவித்து வந்தவர் கோவை தண்ணீர் பந்தலைச் சேர்ந்த வி.பழனிச்சாமி (39). தற்போது மின்வெட்டு ஆடிய ஆட்டத்தில் தனது லேத்தை லீசுக்கு விட்டு விட்டு அதன் அருகிலேயே தள்ளுவண்டி போட்டு விட்டார். தக்காளிசாதம், தயிர்சாதம், லெமன் சாதம், கம்மங்கஞ்சி என விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்கு வந்து விட்டார். “1.25லட்சம் முதலீடு போட்டு சிறு லேத் நடத்தினேன். டிரில்லிங், டூல் கிரைண்டிங் வேலைகளுக்கு ஜாப் ஆர்டர் எடுத்து வேலை செய்தேன். தினசரி ஒரு ஷிப்டில் 3 பேர் 4 பேர் தொழிலாளிகளை வைத்து வாரம் ரூ2000 வரை ஒவ்வொருவருக்கும் சம்பளம் கொடுத்தேன். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் 2 மணி நேரம் என ஆரம்பித்த மின்வெட்டு இப்போது 10 மணி நேரம் ஆகிவிட்டது. வார வாரம் சம்பளம் தர இயலவில்லை. ஜாப் ஆர்டரை குறித்த நேரத்தில் சப்ளை செய்ய முடியவில்லை. தலைதப்பித்தால் போதும் என்று தள்ளுவண்டி வியாபாரம் செய்ய வந்துட்டேன். வேலை தெரியும் பெரிய லேத்துக்கு கூலிக்கு போகலாம் என நினைத்தேன். வேலையும் தினசரி உத்தரவாதம் இல்லை. மான ரோஷம் பார்த்தா வயிறு கடிக்கும்னு தான்…” சாண் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை ஏதோ பழனிச்சாமிக்கு மட்டும் தான் என்றில்லை. பலரையும் இப்படி புரட்டிப் போட்டு பந்தாடிய தைப் பார்க்க முடிந்தது. கோவை பீளமேடு ஹட்கோ காலனி அருகில் லெட்சுமி பவுண்டரி ஒன்றும் மூடிக்கிடக்கிறது. “ஓராண்டுக்கு முன் தினந்தோறும் அங்கு 40லிருந்து 50பேர் வேலை பார்த்தார்கள். எனக்கும் ஓரளவு பீடி, சிகரெட் மிட்டாயெல்லாம் விற்றது.” என்று தன் அங்கலாய்ப்பைச் சொன்னார் அருகிருக் கும் பெட்டிக்கடைக்காரர் இரத்தினம்பவுண்டரி காய்கறிகடை17லட்சம் ரூபா முதலீடுபோட்டு 18 வருஷமா கோவில்பாளையத்துல பவுண்டரி நடத்தினேன். மோட்டார்பம்ப், கிரில், கிரைண்டர் உதிரிபாகங்கள் ஆர்டர் எல்லாம் செய்தேன். வேலையிலிருந்து 20 கி.மீ தூரம் என்பதால் அவ்வப்போது ஆள்பற்றாக் குறை வரும். 50 எச்.பி மின்சாரம் கேட்டு நாலு வருஷமாச்சு, ஆனா இதுவரை கிடைக்கவேயில்லை. கூடுதலா ஒரு வருசத்துக்கும் மேல பவர்கட்டால ரூ7 லட்சம் நஷ்டம் வேற. கூட்டிக் கழிச்சு பார்த்தேன். வாடகைக்கு பவுண்டரிய விட்டுட்டு வந்துட்டேன். கொஞ்ச நாள்ல வாடகைப்பணம் மட்டும் வெச்சு வாழ்க்கைநடத்த முடியல. வீட்டுலேயே ஒரு பக்கம் ஒதுக்கி காய்கறி, மளிகை வியாபாரம்னு செய்யுறேன்” என்றார் தண்ணீர்பந்தலைச் சேர்ந்த பி.சுந்தரவடிவேல். மின்வெட்டு மட்டுமா பெரிய முதலீடு போட்ட உங்களைப் பாதிச்சது? என்றவுடன், இல்லை; 1982 வரைக்கும் பவுண்டரிக்கான பிக்கான், ஸ்டீல், ஸ்கிராப் போன்ற மூலப்பொருள் எல்லாம் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந் தியா(செயில்)தான் ரேசன் முறையிலசப்ளை பண்ணும். விலை கட்டுப் பாட்டுல இருக்கும். 82 க்கு பின்னால் தனியார் மயமாச்சு, மூலப்பொருளு க்கு வந்து இனி மார்க்கெட் ரேட்தான் என்றார்கள். இப்போ எந்த கேள்வியும் கேட்பாருமில்லை. நிலையான விலைஇல்லாததால் பெரிய முதலீடு இருந் தாத்தான் தொழிலில் நிற்க முடியும். என்னைப்போல பலரும் தொழிலை விட்டுப் போயிருக்காங்க” என்றார். தொழிலதிபர் அந்தஸ்தை இழந்த அந்த சிறு வியாபாரி. ‘தாழ்வுற்று…. வறுமை மிஞ்சி’ கடந்த ஆறேழு மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிகள் கோவையிலிருந்து மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். அதை விடவும் சிறுதொழில் நடத்தி வாரச்சம்பளம் போட கந்துவட்டிக்கு கடன்வாங்கி நொந்து போய் குடும்பத்துடன் ஊரைவிட்டு வெளியேறிய கோவைக்காரர்களும் உண்டு. ஏனென்றால் “அஞ்சு பத்துப் பேருக்கு வேல குடுத்தவன். அந்தக் கூலி வேலை உள்ளூர்ல பார்த்தா நல் லாவா இருக்கும். அதான் சேலத்துல போயி சென்டிரிங் பலகை அடைச்சு பொழைக்கிற ஆளுல்லாம் உண்டு” என்கிறார் சுந்தரவடிவேல். ‘மத்திய தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுப் பிரிவினரான வர்த்தகர்கள், கடைக்காரர்கள் மற்றும் பொதுவாக வெளியேற்றப்பட்ட சிறுதொழில் பிரி வினர், கைவினைஞர்கள், விவசாயிகள் ஆகிய அனைவரும் சிறிது சிறிதா கத் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கத்துக்குள் வந்தடைகின்றனர். இதற்கு ஒரு காரணம் பெரிய அளவில் நடத்தப்படும் நவீனத்தொழில்களுக்கு இவர்களின் சொற்ப மூலதனம் போதுமானதாக இல்லை” (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – 1848) மறுகாரணமாகி மின்வெட்டையும் சேர்த்துக் கொண்டால் மார்க்சீய மூலவர்களின் தீர்க்கதரிசனம் 164 ஆண்டுகளுக் குப் பின்னரும் எவ்வளவு துல்லியமாகப் பொருந்திப்போனது! எப்படி எதிர்கொள்வது…! “இன்னும் ஓராண்டு மின்வெட்டு தொடர்ந்தால் கோவையின் சிறு குறுந் தொழில்கள் அழிந்துபோகும். கொஞ்சம் முதலீட்டு வசதிகொண்டோர் ஜெனரேட்டர் பயன்படுத்துகிறார்கள். ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.50. ஜென ரேட்டரில் செலவு ரூ18.00. இது தவிர ஜெனரேட்டருக்கான 5 லட்ச ரூபாய் முதலீடு, அதன் வட்டி பராமரிப்பு செலவு கணக்குப்போட்டால் மின் செலவு அதிகம் வரும். 80எச்.பி அளவிலான ஒரு ஜெனரேட்டர் பயன்ப டுத்தும் நிறுவனம் 26 நாட்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மின்சாரத்துக்கு மட் டும் செலவு செய்ய வேண்டும். இதையெல்லாம் சிறு குறுந்தொழில் நிறுவ னங்கள் தாங்க முடியாது. ஏற்கனவே எம்.எஸ் ஸ்டீல், ப்பிராஸ், ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ மொபைல் தொழிலில் மந்தம் நிலவுகிறது. பம்ப் தயாரிப்பு நிறுவனங்கள் அளவில்லாத கஷ்டங்களையும், இழப்புகளையும் சந்திக்கின்றன” என்று நெருக்கடியின் ஆழ, அகலங்களை வேதனையோடு சொல்கிறார் நவோதயா இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் தி.மணி “பிளாஸ்டிக், நைலான், ஏபிஎஸ், பாலி ஒர்த்தின் உள்ளிட்ட பிளாஸ்டிக் மூலப்பொருள் விலை உயர்வு ஒரு புறம், மின்வெட்டு மறுபுறமும் பிளாஸ்டிக் தொழிலை முடக்கிப்போட்டுள்ளதாக கவலையோடு சொல்கிறார் நர்மதா பிளாஸ்டிக் உரிமையாளர் ஆர். சந்திர சேகர். மேலும் மின்சார விநியோகத்தையாவது தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் என்ற அளவிலாவது சீர் செய்தால், ஷிப்டு கணக்கு வைத்தாவது தொழில் செய்யலாம். ஆந்திராவில் கூட வாரம் மூன்றுநாள் மின்விடுமுறை விடப்படுகிறது. அது கூட பரவாயில்லை போல் தோன்று கிறது. மின் சிக்கனத்திற்கு சி.எப்.எல் பல்புகளை பயன்படுத்து வது குறித்த விழிப்புணர்வையாவது பரப்பிட அரசும் மின்வாரியமும் முயற் சிக்க வேண்டும்” என்றார். போர்க்களத்தினூடே… கடந்த பிப்ரவரி 10 அன்று கோவையில் தொழில் அமைப்புகளும் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்களும் அரசை எதிர்த்து ஆவேசமுடன் மறி யல் களம் கண்டனர். இப்போராட்டத்திற்கு பெரிய தொழில் நிறுவனங் கள் கூட தங்கள் தொழிலாளிகள் முழுவதையும் பங்கேற்கச் செய்தனர். (ஆகப் பெரும்பாலான நிறுவனங்களில் சங்கம் அமைக்கக்கூட அனும திக்காத அதே முதலாளிகள்…!) கொங்குமண்டலம் முழுவதும் கூட, ஏன் தமி ழகத்தின் பல பகுதிகளில் அரசுக்கு எதிராக கண்டனம் வலுவடைந்து வருவதையும் பார்க்க முடிகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை யற்ற மின்சாரம், அவை அதிகம் உள்ளதால் சென்னைக்கு மட்டும் குறை வான மின்வெட்டா? என்று உள்ளூர் முதலாளிகள் ஆவேசப்படுகிறார்கள். “அந்நிய நாட்டு முதலாளி வர்க்கத்துடன் அனைத்து நேரங்களிலும் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டங்களில் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைக்கோரி வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு முதலாளி வர்க் கமே பாட்டாளி வர்க்கத்திற்கு வழங்கிவிடுகிறது.” (கம்யூனிஸ்ட் அறிக்கை) மீண்டும் மாமேதைகள் மார்க்சும், ஏங்கெல்சும் தமிழகப் போர்க்களத்தின் நடுவே தென்படுகிறார்கள். தொழில் நெருக்கடிக்கு, மின்வெட் டுக்கு உரிய தீர்வைக்காணாமல் உதிரிப்பாட்டாளிகளாக சிறு முதலீட்டா ளரையும் ஒட்டாண்டிகளாக உழைக்கும் மக்களையும், வீதியில் தள்ளி னால் எரிமலையினூடே ஆட்சியாளர்கள் இடம் தேடுவதாகத்தான் அர்த்தம்! —- எம்.சக்தி

Leave a Reply

You must be logged in to post a comment.