ஈரோடு,பிப்.13- மருத்துவமனைக் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் காகித ஆலைகளால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு குறித்து, மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு காகித ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்காவிற்குட்பட்ட கொத்தமங்கலம், புதுப்பீர் கடவு, இராஜன் நகர் ஆகிய 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 10—க்கும் மேற்பட்ட காதிக ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் காதிக ஆலைகளுக்கு மருத்துவமனைக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு பிரிக்கப்படுகின்றன. இவை அங்குள்ள ஒவ்வொரு காகித ஆலைகளில் உள்ள சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் குழிகள் வெட்டப்பட்டு அதில் புதைக்கப்படுகின்றன. மேலும் ஆலைக்கு தேவைப்படாத கழிவுகள் புதுப்பீர் கடவு வனப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காகித ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பவானி ஆற்றில் நேரடியாக கலந்து விடப்படுகிறது. இவ்வாறு பல்வேறு வகைகளில் காகித ஆலைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், வனம் மற்றும் மக்களின் குடிநீர் உள்ளிட்டவைகளில் ஒரு சேர கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையில் தலையிட்டு துறைவாரியான நடவடிக்கைள் மேற்கொண்டு மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஈரோடு மாவட் டச் செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்டத் தலைவர் ஜேசுராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 30—கும் மேற்பட்டோர் திங்களன்று நடைபெற்ற மனுநீதி நாள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: