டெம்போ மீண்டும் வெற்றிப்பாதையில் இந்தியாவில் பல்வேறு மையங்களில் நடந்த இந்திய லீக் கால்பந்து போட்டி களில் டெம்போ, சிராக், சல்கோகர் அணிகள் வெற்றி பெற்றன. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெம்போ அணி தன்னு டைய நிலையை உறுதிப்படுத்திக் கொண்டது. இந்திய கால்பந்து அமைப்பின் இளையோர் அணியான பைலன் ஆர்ரோஸ் அணியை டெம்போ 2-0 என வென்றது. நைஜீரிய வீரர் ராண்டி மார்ட்டின்ஸ் இரண்டு கோல்களையும் அடித்தார். இளையோர் அணி இந்தியாவின் தலைசிறந்த அணிகளில் ஒன் றான டெம்போவை 82 நிமிடம் வரை கோல் அடிக்கவிடாமல் தடுத்தது பாராட்டுக்குரியது. ஏர் இந்தியா – சிராக் யுனைடெட் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி யில் சிராக் யுனைடெட் அணி 3-1 என வென்றது. ஆட்டம் தொடங்கிய 5ம் நிமிடத்தில் ஏர் இந்தியாவின் சந்தோஷ் கட்காரி அணியின் ஒரேகோலை அடித்தார். 31ம் நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை கோலாக சார்லஸ் டிசிஜா மாற்றி ஸ்கோரை சமன் செய்தார். சிராக் அணி வீரர்கள் சுக்வீந்தர் சிங் 65ம் நிமி டத்திலும், டேவிட் 87ம் நிமிடத்திலும் கோல்களை அடித்து அணியின் வெற் றியை உறுதிப்படுத்தினர்.கோவா ஸ்போர்ட்டிங் கிளப் அணியிடம் முதல் போட்டியில் தோற்ற சல்கோகர் அணி இரண்டாவது போட்டியில் 2-1 என வென்றது. சல்கோகர் அணிக்கு பீவன் டி’ மெல்லோவும் டோம்பா சிங்கும் தலா ஒரு கோல் அடித்தனர். ஸ்போர்டிங் அணியின் கலுஓக்பா ஆறுதல் கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் சல்கோகர், புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. புனேயில் நடந்த போட்டியில் புனே அணி 2-1 என்ற கோல்களில் பிரயாக் யுனை டெட் அணியை தோற்கடித்தது. இந்த வெற்றியுடன் புனே அணி 5ம் இடத் துக்கு முன்னேறியது. பிரயாக் யுனைடெட் அணி 7ம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.