ஜாம்பியா ஆப்பிரிக்க சாம்பியன் ஐவரிகோஸ்ட்டின் தவறுகளால் ஜாம்பியா பட்டம் வென்றது. ஆப்பிரிக்க கால்பந்து சாம்பியன் பட்டத்துக்கான ஆப்பிரிக்கன் கப் ஆப் நேஷன்ஸ் இறுதி ஆட்டத்தில் ஜாம்பிய டைபிரேக்கரில் 8-7 என்ற கோல்களில் ஐவரி ஸ்ட்டை தோற்கடித்தது. இது ஜாம்பியாவின் முதல் சாம்பியன் பட்டம் ஆகும். 1993ம் ஆண்டில் நடந்த விமான விபத்தில் ஜாம்பியாஅணியினர்முழுவதும் பலியான இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லிப்ரவில்லி நகரில் நடந்த போட்டியில் ஜாம்பியா, அனைவரும் வெல்லும் என்று கருதப்பட்ட ஐவரிகோஸ்ட் அணியை தோற்கடித்துள்ளது. ஆட்டத்தின் 70ம் நிமிடத்தில் இங்கிலாந்தின் செல்சியா அணியில் ஆடி வரும் டிடியர் ட்ரோக்பா பெனால்டியில் கோல் அடிக்கத்தவறிவிட்டார். முறையான 120 நிமிட ஆட்டநேரத்தில் இரு அணிகளும் கோல்போடத் தவறி விட்டன. பிரிட்டனின் ஆர்சனல் அணியில் ஆடும் ஜெர்வின்ஹோவை ஜாம்பியா வீரர் கள் தள்ளிவிட்டனர். கோல் சதுக்கத்துக்குள் நடந்த முறையற்ற ஆட்டத் துக்கு தண்டனையாக ஜாம்பியாவுக்கு எதிராக பெனால்டி அளிக்கப்பட் டது. டிடியர் ட்ரோக்பா பந்தை கோல்கம்புக்கு மேலாக அடித்து வாய்ப் பைத் தவறவிட்டார். ட்ரோக்பா டைபிரேக்கரில் கோல் அடித்தபோதும் முதுல் தவறுதல் மிகப்பெரிய இழப்பாகிவிட்டது. டைபிரேக்கரில் இரு அணிகளின் முதல் ஏழு வீரர்களும் தங்களின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கோல் அடித்தனர். ஸ்கோர் 7-7 எனச் சமமாக இருந்தது. எட்டாவது வாய்ப்பில் ஐவரி கோஸ்ட்டின் கோலோ டூரே அடித்த பந்தை ஜாம்பியா கோல்கீப்பர் கென்னடி மவீன் தடுத்து, ஜாம்பியா வுக்கு வெற்றி வாய்ப்பை அளித்தார். அடுத்து வந்த ஜாம்பியா வீரர் கலாபா ரெயின்போர்ட் பந்தை கோல் குறுக்குக்கம்புக்கு மேலாக வானில் அடித்தார். ஒன்பதாவது வாய்ப்பில் ஜெர்வின்கோ பந்தை வெளியில் அடித்தார். அடுத்துவந்த ஸ்டோபிரா சுன்ஸு கச்சிதமாகப் பந்தை கோலுக்குள் அடித்தவு டன் ஜாம்பியா வென்றது. மைதானம் எங்கும் களியாட்டம் தொடங்கியது.

Leave A Reply

%d bloggers like this: