ஜப்பான் பெரிய கட்சிகளைக் கலக்கிய கியோட்டோ மேயர் வேட்பாளர் டோக்கியோ, பிப்.13 – ஜப்பான் பெரிய கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் திரண்டு வருகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், கியோட்டோ நகர மேயர் தேர்தல் அமைந்திருக் கிறது. இந்தத் தேர்தலில் மாற்றுக் கொள் கைகளை முன்னிறுத்துவோரிடம் தோற்றுவிட்டால் தங்கள் அரசிய லுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் நாட்டில் உள்ள ஜனநாயக, தாராள ஜனநாயக மற்றும் கொமேய் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்தின. மேயராக இருந்த கடோகவா டய்சாகுவிற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவ ருக்கு எதிராக ஜப்பான் கம்யூனி°ட் கட்சியின் ஆதரவு பெற்ற நகமுரா கசு வோ நிறுத்தப்பட்டார். கடந்த முறை யில் இவர் போட்டியிட்டிருந்தார். 57 வயதான வழக்கறிஞர் நகமுரா, அனைத்து எதிர்ப்புகளையும் மீறி 1 லட்சத்து 89 ஆயிரத்து 971 வாக்கு களைப் பெற்றார். கடந்த முறை போட் டியிட்டபோது 1 லட்சத்து 57 ஆயி ரத்து 521 வாக்குகளைப் பெற்றிருந் தார். இம்முறை மூன்று பெரிய கட்சி களின் ஆதரவை கடோகவா பெற்றி ருந்தாலும், குறுகிய வாக்கு வித்தியாசத் தில்தான் வெற்றி பெற முடிந்தது. ஆளும் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக நின்ற நகமுராவின் வாக்கு சதவிகிதம் 37.2ல் இருந்து 46.1 ஆகவும் உயர்ந்தது. தேர்தல் முடிவு பற்றிக் கருத்து தெரிவித்த மேயர் ஆதரவாளர், தேர்த லுக்கு முன்பாக மூன்று பெரிய கட்சி களின் ஆதரவு இருந்ததால் எளிதாக, பெரும் வெற்றியைப் பெற்று விட முடியும் என்று நினைத்திருந்தோம். இவ்வளவு நெருக்கடி ஏற்படும் என்று நினைத்துப் பார்க்கவில்லை என் கிறார். ஒவ்வொரு நாளும் மூன்று கட்சிகளிலிருந்து ஏதாவது ஒரு நாடா ளுமன்ற உறுப்பினரை அழைத்து வந்து பிரச்சாரம் செய்தனர் கடோக வாவின் ஆதரவாளர்கள். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் இடம் பெற்ற அம்சங்கள்தான் போட் டியை மிகவும் நெருக்கமாக்கிவிட்டது. தேசிய மருத்துவக் காப்பீட்டுத்திட் டத்தில் வெட்டு, வேலைவாய்ப்புகள் போன்ற அம்சங்களில் ஜப்பான் கம்யூனி°ட் கட்சியின் ஆதரவுடன் நின்ற நகமுராவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றது. பேரழிவின்போது கம்யூனி°ட் கட்சி ஆற்றிய சேவைப் பணிகள் நகமுரா விற்கு கூடுதல் ஆதரவு கிடைக்கச் செய் தது. மேலும், 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இப்பகுதியில் நின்ற கம்யூனி°ட் கட்சி வேட்பாள ரை விட மேயர் தேர்தலில் கூடுதல் வாக் குகள் கிடைத்திருப்பது அதிருப்தி அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.

Leave A Reply