திருநெல்வேலி, பிப்.13- ஜப்பானிய தொழில் முதலீடு களை தென்மாவட்டங்களுக்கு கொண்டு வந்தால்தான் தென்மாவட் டங்கள் வளரும். எனவே தமிழக முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லையில் மார்க் சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி. கூறினார் . இது குறித்து நெல்லையில் செய் தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி யின் மாவட்ட மாநாடுகள் தற்போது முடிந்து உள்ளன. தொடர்ந்து இம்மாதம் நாகப்பட்டினத்தில் கட்சி யின் மாநில மாநாடு நடைபெறு கிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் 9 ம் தேதி வரை கட்சியின் அகில இந்திய மாநாடு கேரளா மாநிலம் கோழிகோட்டில் நடைபெறுகிறது. சோசலிசம் மற்றும் மக்களின் பல்வேறு பிரச்ச னைகள் போன்றவை குறித்து மாநாட் டில் ஆலோசனை நடத்தப்படும். பொதுமக்களின் விமர்சனங்கள் குறித்தும் மாநாட்டில் கட்சி விவா திக்கும். தமிழகத்தில் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்பட்டுள் ளது. ப°கட்டணம், பால் விலை ஆகியவற்றின் விலை உயர்வு மக்க ளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. சிறிய, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பழைய வேலையில் தொடர முடியாத சூழ்நிலையும் தற்போது ஏற்பட்டுள் ளது. கடந்த 15 ஆண்டுகளாக தமி ழகத்தில் மாறிமாறி ஆண்ட கட்சி களின் சரியான திட்டமிடுதல் இல் லாத காரணத்தினாலே மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது ரைக்கு தெற்கே தொழில்களே இல்லை. தென்மாவட்டங்களில் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இரட்டை ரயில்பாதை இல்லை . இது போன்ற குறைகள் இருப்ப தால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி யடையவில்லை. தென்மாவட்டத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றோர் இருந்தும் கூடுதல் ரயில்கள் இயக்க முடியவில்லை. இரட்டை ரயில்பாதை வேண்டும் வேண்டும் என்று கத்திய பின்பும் கூட, தென்மாவட்டங்களை ரயில்வே துறையும் புறக்கணிக்கிறது. ரயில் வேக்கு தென்மாவட்டங்களைப் பற்றி அக்கறையே இல்லை. நெல்லையில் பல்கலைக்கழகம் இருப்பதால் இங்கு தொழிற்சாலைகள் அமைக்க தமிழக அரசு முன் வரவேண்டும். ஜப்பானிய முதலீடுகளை தென்மாவட்டங் களுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொழிற்கூடங்களை சேர்ந்தவர் களை அழைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழ கத்தில் மின்வெட்டை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி ஆதரிக்கிறது. மின்வெட்டு மற்றும் இதர குறைகளை பற்றி பேச சட்ட சபையில் மறுக்கப்படுகிறது. எம். எல்.ஏக்கள் கேள்விகேட்கும் போது அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசுகி றார்கள். காலை 10 மணிக்கு ஆரம் பித்து, மதியம் 1 மணிக்கே சட்டசபை முடிந்து விடுகிறது . சபாநாயகர் அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும். எதிர்க் கட்சி தலைவர் ச°பெண்டு செய்யப் பட்டதை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்திலும் இதேபோல் சூழ்நிலை தான் உள்ளது. வரும் ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக தகவல்கள் வருகின்றன. வேலை வாய்ப்புகள் சுருங்கியுள்ளது. தொழிற் சட்டங்கள் மறுக்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு நடவடிக்கை களை கண்டித்து சி.ஐ.டி.யு , ஏ.ஐ. டி.யு.சி , பி.எம்.எ° ,ஐ. என்.டி.யு.சி, தொமுச உட்பட முக்கியமான 11 சங்கங்கள் இணைந்து இம்மாதம் 28 ம் தேதி அகில இந்திய அளவில் பெரும் வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளன. கூடங்குளம் விஷயத்தை பொறுத்தவரை முன் னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது போல், கடற்கரை கிராம மக்களை மேம்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான பணி களை மத்திய ,மாநில அரசு செய்ய வேண்டும். கூடங்குளத்தில் கட்டப் பட்டு வரும் அணு உலையை இந்தி யாவிலேயே தயாரிக்க கூடிய வசதி கள் உள்ளன. இனி வரும் காலங் களில் அணு உலை இயந்திரங்களை இந்தியாவிலே தயாரிக்கலாம். கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் தமிழக அரசின் வல்லுனர் குழுவில் இடம் பெற்றுள்ள எம்.ஆர்.சீனிவாசனை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எம்.ஆர்.சீனிவாசன் ஒரு தலைசிறந்த அணு விஞ்ஞானி ஆவார். எனக்கு ஒருமுறை உடலில் அலர்ஜி ஏற்பட்டது. அதை குணப் படுத்த தில்லியில் உள்ள சர்தார் வல்ல பாய் படேல் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கோ அலர்ஜி வரும் நிலையில் மருத்துவமனை இருந்தது. உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திற்கு மருத்துவமனையின் அவலங்கள் குறித்து கடிதம் எழுதினேன். கடிதம் எழுதி ஒரு வருடம் கழித்துதான் பதிலே வந்தது. கடிதத்தில் சுகாதாரம் என்பது மாநில அரசின் கையில் தான் உள்ளது. மத்திய அரசின் கையில் இல்லை. இது குறித்து நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்வர் களுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ள தாக எழுதப்பட்டு இருந்தது. இது தான் இன்றைய நிலை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு டி.கே.ரங்க ராஜன் எம்.பி. .கூறினார். பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, ஆர்.கருமலையான், மாவட்ட செயலாளர் கே.ஜி.பா°கரன், மாநகர செயலாளர் ஆர்.கருணாநிதி ஆகி யோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: