கவுகாத்தி, பிப். 13 – தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துக்களின் பிரதி நிதிகள் ஜனநாயகத்தின் முதல் அடுக்கு; மேம்பாட் டின் 3வது அடுக்கு அல்ல என்று மத்திய ஊரக மேம் பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். அசாம் தலைநகர் கவு காத்தியில் ஞாயிற்றுக் கிழமை கிராமோநயன் சம் மேளன நிகழ்ச்சி நடந்தது. இதில் உரையாற்றிய ஜெய் ராம் ரமேஷ், கிராமங்களின் முன்னேற்றத்தைக் காண மாநில அரசுகள் உண்மை யிலேயே விரும்பினால், அவர்கள் அதிகாரத்தை பகிர்வு செய்யத் தயாராக இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை பஞ்சாயத் துக்களுக்கு அளிக்க வேண் டும். 2012-13ம் நிதி ஆண்டில் தனது முன்னுரிமையான கிராமப்பகுதிகளில் தூய குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும். நாட்டில் 25 ஆயிரம் கிராமங்கள் நிர்மல் கிராம் பஞ்சாயத்துக்களாக உள்ளன என்றார். நிகழ்ச்சி மேடையில் அசாம் முதல் வர் தருண் கோகய் இருந்தார். அவரை நோக்கி, ஜெய் ராம் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 2489 கிராமப் பஞ்சாயத்துக்களை நிர்மல் கிராம் பஞ்சாயத்துக்களாக மாற்ற வேண்டும் என்றார். அசாம் மாநிலத்தில் 25 ஆயி ரத்து 590 கிராமங்கள் உள் ளன. கிராமப்புற தூய குடி நீர் மற்றும் சுகாதார வசதி களுக்கான திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை இருக் காது என்ற அமைச்சர், பஞ் சாயத்து பிரதிநிதிகள் திட் டங்களை செயல்படுத்து வதில் உள்ள ஊழல்களுக்கு எதிராக போராட வேண் டும் என்றார். கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் 11 ஆயிரம் கி.மீ. நீள கிராமப்புற சாலைகள், அமைக்கப்பட்டதை ஜெய் ராம் வரவேற்றார்.

Leave A Reply

%d bloggers like this: