செய்தித்துளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் தீயணைப்புப் படை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பணிஓய்வுக் கான புதிய விதிகள், ஊழியர்களுக்கு விரோதமாக இருப்ப தால் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். பெல்ஜியத்தின் தீய ணைப்புப்படையில் சுமார் 17 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இவர்களின் பணிஓய்வுக்கான வயது 67 ஆக உயர்த்தப் பட்டிருக்கிறது. ஓய்வூதியம் தருவதைத் தள்ளிப்போடவே இந் தப் புதிய விதி என்று தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். * * * சிரியாவில் ஐ.நா மற்றும் அரபு லீக்கின் கூட்டுப்படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று அரபு லீக் ஆலோசனை அளித்துள்ளது. எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அரபு லீக் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஆலோசனைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ஆலோ சனை தவறானது என்று சிரியா அரசு கருத்து தெரிவித்துள் ளது. தங்கள் நாட்டில் இத்தகைய தலையீடு கூடாது என்று அந்த அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. * * * ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் அலுவலகங் களை இழுத்து மூடப்போவதாக அரசு வெளியிட்டிருக்கும் அறி விப்புக்கு பிரிட்டனின் போக்குவரத்து ஊழியர்கள் கடும் கண் டனம் தெரிவித்திருக்கிறார்கள். 2013 ஆம் ஆண்டுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பல நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்களை நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: