சென்னை, பிப். 13 – தெற்கு ரயில்வேயின் இரண்டு கூட்டுறவு வங்கிக ளில் ரூ.1,400 கோடி அள வுக்கு ஊழல் நடந்துள்ளதா கவும், தொழிலாளர்களிடம் வெற்றுத்தாளில் கையெழுத் துப் பெற்று போலி ஆவ ணங்கள் தயாரிக்கப்பட் டதாகவும் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அலுவலகம் முன்பாக திங் களன்று (பிப்.13) பெருந்தி ரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தட்சிண் ரயில்வே எம்ப்ளாயீ° யூனியன் (டிஆர் இயு) அழைப்பை ஏற்று, இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஊழியர் கள் பங்கேற்று ஆவேச முழக்கம் எழுப்பினர். சட்டப்பூர்வ வருமானத் திற்குப் பொருந்தாத வகை யில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள இந்த வங்கிகளின் நிர்வாகிகள் மீது உரிய சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும், கடன் உதவிகளுக்காக விண் ணப்பிக்கிற தொழிலாளர்க ளிடமிருந்து 40 விழுக்காடு வரை ‘கமிஷன்’ பெறப்படு வதையும், தொழிலாளர்க ளின் வியர்வையும் ரத்தமும் இவ்வாறு உறிஞ்சப்படுவ தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன. சென்னையில் உள்ள அர்பன் வங்கி எனப்படும் ரயில்வே தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கம், திருச்சியில் உள்ள தென்னக ரயில்வே ஊழியர் கூட்டுறவு நாணய கடன் சங்கம் ஆகிய இரண்டு வங்கிகளிலும் சுமார் ரூ.1,400 கோடி வரையில் முறைகேடாக கையாளப் பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற எழுத்துபூர்வ ஆதா ரங்களின் அடிப்படையில் இந்தத் தொகை கணக்கிடப் பட்டுள்ளது. ஆதாரங்கள் கிடைக்காத பல நடவடிக் கைகளையும் கணக்கிட்டால் 15,000 கோடி ரூபாய் வரை யில்கூட ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் சுட்டிக்காட் டினர். (சென்னை அர்பன் வங்கிக்கு எ°ஆர்எம்யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் என். கண்ணையா, திருச்சி வங்கியில் அதன் தலைவர் ராஜா ஸ்ரீதர் ஆகி யோர் தலைவர்களாக உள் ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.) “நுகர்வோர் கடன்களில் கமிஷன் மூலமாகவும் வேறு பல வகைகளிலும் நிர்வா கங்களும், பொருள்கள் வழங்கும் தனியார் வர்த்தக நிறுவனங்களின் முதலாளி களும் இணைந்து இந்தக் கொள்ளையை நடத்தியுள் ளனர். இதுகுறித்த விவரங் களை நேரில் எடுத்துரைத்த போது வியப்புத் தெரிவித்த (கூட்டுறவு அமைப்புகளும் உள்ளடங்கிய) மத்திய விவ சாயத்துறை அமைச்சர் சரத் பவார், உடனடியாக அது குறித்து விசாரிக்க ஆணை யிட்டு எங்கள் கண்முன் கையெழுத்திட்டார். ஆனால் உடனடியாக சென்னையில் உயர்நீதிமன்றத்தை அணுகி விசாரணைக்குத் தடை ஆணை பெறப்படுகிறது! அந்த அளவிற்கு ஊழல் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழக முதலமைச்சர், மத்திய பதிவாளர், மத்திய விவசாய அமைச்சர், இறுதியாக பிரதமர் என அனைத்து மட்டங்களிலும் ரயில்வே தொழிலாளர்களின் பணம் சூறையாடப்படுவது பற்றி கவனத்திற்கு கொண்டுவந்து விட்டோம். எனினும் எவ் வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே தான் சிபிஐ நேரடி நடவ டிக்கை கோரி அதன் கதவு களைத் தட்டுகிறோம்,” என்று டிஆர்இயு பொதுச் செயலாளர் அ. ஜானகிராமன் கூறினார். பணம் கடத்தப்படுவது மட்டுமே ஊழலல்ல. வங்கிக ளின் உறுப்பினர்களான தொழிலாளர்களிடம் வெற்றுத்தாளில் கையெழுத் துப்பெற்று, மத்தியப் பதிவா ளரிடம் போலியான ஆவ ணங்களைத் தாக்கல் செய்து, தேர்தல்கள் முறைப்படி நடந்தது போலக் கணக்குக் காட்டுவதும் ஊழல்தான். வங்கிகளுக்குத் தேவையான எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக ஊழியர் கள் நியமிக்கப்பட்டதிலும் கோடிக்கணக்கில் கையூட்டு பெறப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். சிபிஐ தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளத் தவறினால், உரிய ஆணை பிறப்பிக்கக்கோரி நீதிமன் றத்தை அணுகவும் டிஆர் இயு தயாராக இருக்கிறது என்றார் அவர். டிஆர்இயு உதவிப் பொதுச்செயலாளர் கே. சந்திரசேகரன், “கூட்டுறவு சங்க சட்டப்படி ஒரு ரூபாய் கொடுத்து உறுப்பினராக உள்ளவருக்குக்கூட ஆண்டுக் கணக்கும் வரவு – செலவு அறிக்கையும் அளிக்கப் படவேண்டும். ஆனால் இந்த வங்கிகளில் அவ்வாறு கணக்கு அளிக்கப்படுவ தில்லை,” என்று விமர்சித் தார். கூட்டுறவே நாட்டுயர்வு என்ற எண்ணத்துடன்தான் இத்தகைய வங்கிகளில் தொழிலாளிகள் இணைந் தார்கள். ஆனால் இங்கோ கூட்டுறவே கொள்ளை உயர்வு என்ற கொள்கைதான் இந்த இரண்டு வங்கிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் அவர். தலைமை தாங்கிய சங் கத்தின் செயல் தலைவர் ஆர். இளங்கோவன், “ரூ.60,000 கடன் ஒப்புதல் அளிக்கப்படுகிற தொழிலா ளிக்கு 40 விழுக்காடு கமி ஷன் எடுத்துக்கொள்ளப் பட்டு ரூ.36,000 மட்டுமே தரப்படுகிறது. அவர் திருப் பிச் செலுத்தும் தொகையோ ரூ.74,000. அதை செலுத்த முடியாத தொழிலாளிக்கு தனிப்பட்ட முறையில் ரூ.10 வட்டியில் கடன் தரப்படுகி றது. இப்படி ஆயிரக்கணக் கான தொழிலாளியிடம் சுரண்டி கோடீ°வரர்களாக மாறிவிட்டார்கள்,”என்றார். யாரும் பார்க்காத செய் தித்தாளில், கண்ணுக்குத் தெரியாத எழுத்தில் வங்கித் தேர்தல் குறித்து விளம்பரம் செய்யப்படும். அந்தப் பத்தி ரிகை தொழிலாளர்களுக் குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். பின்னர் தேர்தல் நடத்தப்பட்டதாக கணக்குக் காட்டப்படும். 1989முதல் இப்படித்தான் நடந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு கூட்டுறவு சம் மேளனப் பொதுச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த் திப்பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: