சமச்சீர் கல்வியை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் – பெற்றோர்கள் பரிதவிப்பு கோவை, பிப். 13- நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத சில தனியார் பள்ளிகள் நடத்தும் தனி பாடத்திட்டத்தால் மாணவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உயர் கல்வி, பணம் இல்லாதவர்களுக்கு கிடைப்பதே கல்வி என்ற நிலையை மாற்றி பாடத் திட்டங்களை அனைவருக்கும் சமமாக்கும் வகையில், பல இயக்கங்களால் பல போராட்டங்களுக்குப்பின் கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பல தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வியை ஏற்றுக்கொண்டன. இதற்கு பதிலாக மாணவர்களையும் பெற்றோர்களை யும் இப்பள்ளிகள் நாளுக்கு நாள் நோகடித்துக்கொண்டே இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசின் பாடத்திட்டங்களை ஒரு ஓரமாகவைத்து, தங்களது சொந்த பாடத்திட்டங்களை நடத்துவதிலே கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், தேர்வின் போது, இரண்டு பாடத் திட்டங்களையும் படிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது மாணவர்களின் பிரச்சனையென்றால், பெற் றோர்களுக்கோ பள்ளிக் கட்டணப் பிரச்சனை. இதுகுறித்து பெற் றோர்கள் சங்கத் தலைவர் தெரிவிக்கையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக ளுக்கும் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த அரசு செய்த முயற்சிகள் எதிர் பார்த்த அளவிற்கு பயன ளிக்கவில்லை. மேலும், தனியார் பள்ளிகள் அனைத்தும் சமச்சீர் பாடத்திட் டத்தில் அல்லாத பாடங் களிலே அதிக கவனம் செலுத்துகின்றன. எனவே இரண்டு பாடத்திட்டங்களிலும் பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயத்தால் மாணவர்கள் உள்ளனர். இது அவர்களுக்கு மிகுந்த சுமையாக உள்ளது. மேலும், தனியார் பாடத் திட்டத்தில் உள்ள பாடங்கள் மாணவர்களின் வயதிற்குத் தகுந்தாற்போல் இல்லாமல் உயர் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து பெற் றோர் – மாணவர் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவிக்கையில், பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை தனியார் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்களை வாங்க வற்புறுத்துகின்றனர். மேலும், சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்களை பயன்படுத்தாமல், தனியார் பாடத் திட்டத்தின் கீழே பாடங்களை நடத்துகின்றனர். இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்கும்போது, அரசு அறிவுறுத்தபடியே பாடங்களை நடத்துவதாக கூறுகின்றனர் என்றனர். இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் எ°.கோபிதா° கூறியதாவது, அரசின் வழிகாட்டுதலின் படி, பள்ளிகள் அரசு வெளியி டும் புத்தகங்களையோ அல்லது அரசால் அனுமதிக்கப்படும் புத்தகங் களையோ இணை பாடப்புத்தகங்களா பயன்படுத்தலாம். ஆனால், பெற் றோர்கள், தனியார் பாடப்புத்தகங்களே அனைத்து பாடங்களுக்கும் பயன் படுத்துவதாக தெரிவிக்கின்றனர். மேலும், தனியார் பள்ளிகளின் விருப் பப்படி பாடத்திட்டங்களை விட்டுவிடுவதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். பள்ளிகளை தொடர்ச்சியாக நேரில் சென்று பார்வையிடுவது மற்றும் கண்காணிப்பதன் மூலமே பள்ளிகளின் நடைமுறையை ஒழுங்குபடுத்தமுடி யும் என்று அவர் கூறினார்.அதேபோல், கல்வி அதிகாரிகளின் சோதனை யின் போது அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள மட்டுமே, தனியார் பள்ளி கள் மாணவர்களை சமச்சீர் பாடப்புத்தகங்களை கொண்டு வரச்சொல்வ தாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதில் அரசு கவனம் செலுத்தி, மாணவர்களையும், பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே சமச்சீரை எதிர்பார்க் கும் மக்களின் கோரிக்கையாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.