சந்தேகம் சாமிக்கண்ணு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் எனக்குப் பரிசாக அளிக்க கட்சித்தொண்டர்கள் விவேகமாகப் பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா. ச.சா – பதிலுக்கு 16 மணிநேர மின்வெட்டுனு பரிசு ஏதாவது மக்களுக்காக வெச்சுருக்கீங்களா…?? * * * இந்தியா போன்ற மிகப்பெரிய பரப்பளவுள்ள நாட்டில் சில இடங்களில் சிறிதளவு உணவு தானியங்கள் கெட்டுப்போவது, அழுகுவது என்பது தவிர்க்க இயலாதது – மத்தியத் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா. ச.சா – டன், டன்னா போறது உங்களுக்கு சில இடங்களில், சிறிதளவுன்னு தோணுதா…?? * * * முன்னேற்றப் பாதையில் முன்பேர சந்தைகள் – மத்திய நுகர்வோர் துறைச் செயலர் ராஜீவ் அகர்வால். ச.சா – மக்களுக்கு பின்னேற்றமா இருக்குதே…?? * * * கிராம வளர்ச்சியின் மூலம் மாவோயி°டு பிரச்சனையை எதிர்கொள்ளலாம் – மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ச.சா – 65 வருஷத்துல பெரும்பாலும் ஆட்சில இருந்து கிராமப்புறங்கள முன்னேற விடாம பாத்துக்கிட்ட காங்கிர°தான இதுக்குக் காரணம்…

Leave a Reply

You must be logged in to post a comment.