கோவை தனியார் பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார் கோவை, பிப். 13- கோவையிலுள்ள சில தனியார் பள்ளிகளில் மிக அதிகமான கட்டணம் வசூ லிக்கின்றனர். முறைகேடாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவை ஆட்சியர் எம். கருணாகரனிடம் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். கோயமுத்தூர் பெற்றோர்களின் மாணவர் நலச்சங்கத்தின் தலைவர் மணிக்குமார், கன்வீனர் வி. தெய்வேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசின் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கோவையில் பல தனியார் பள்ளிகள் மிகக் கூடுதல் கட்ட ணம் வசூலிக்கின்றன. அதில் எஸ்.பி.ஓ.ஏ. செயின்ட் ஜோசப், நேருவித்யாலயா, சின்மயா வித்யாலயா, அல்வேர்னியா, ருக்மணிகண்ணன் உள்ளிட்ட பல பள் ளிகளில் இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசின் கட்டண நிர்ணயக்குழுவில் பெற்றோர்களின் புகார்களும் மேல்முறையீடுகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் செலுத்தக் கோரி பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு ஆணையிட வேண் டும். சட்டத்திற்கு புறம்பான கட்டண வசூல் செய்வதற்கு மாணவர்களை ஏமாற்றி இணங்க வைக்கவும், பெற்றோருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்க வும் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். சமச் சீர் பாடத்திட்டத்தை நடத்தாமலும் மற்றும் மாண வர்களுக்கான வசதிகளும் ஏற்படுத்தாத நிலையே தொடர்கிறது. எனவே தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் தன்னிச்சையான போக்கிற்கு அரசு அனுமதி யளிக்க கூடாது. அரசு விதிகளின் படி செயல்படுவதை கண்காணிக்க வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இம்மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்தினரையும் பெற் றோரையும் கொண்ட பேச்சு வார்த்தை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: