குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி பேரணி-ஆர்ப்பாட்டம் சேலம், பிப். 13- சேலம் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஏழைகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். தங்கராஜ், குமார், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாநகரில் 1987ல் 10 ஆயிரம் வீடுகள் ஏழைகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த வீடுகளை குடிசைகளாக இருந்ததை, ஓட்டு வீடாக மாற்றிக்கொள்ள ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை சிறிய கடன்கள் வழங்கப்பட்டன. தற்போது குடிசை மாற்று வாரியம் வாங்கிய கடனை அசல் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டு கிரயப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும்படி அறிவித்துள்ளது. ஆனால் வழங்கிய கடனுக்கான வட்டியுடன் அதிகதொகை தேவைப்படுகிறது. இதனை ஏழைகளாகிய எங்களால் கட்ட முடியாது. எனவே நிர்வாகம் வாங்கிய கடன் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். விலையில்லா கிரயப் பத்திரம் பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. பேரணியின் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: