காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது ஸ்ரீநகர், பிப். 13 – காஷ்மீர் மாநிலத்தை நாட் டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலை கடும் பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டது. ஞாயிறு இரவு முதல் கடுமையாகப் பனி பெய்து வருவதால் 294 கி.மீ. நீளமுள்ள இந்த முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாக போக்குவரத்துத் துறை அதி காரிகள் கூறினர். காஷ்மீரின் நுழைவாயில் என்று கருதப் படும் ஜவகர் சுரங்கப்பாதை யில் ஒன்றரை அடி உயரத் துக்கு பனி குவிந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: