புதுதில்லி, பிப். 13 – இந்தியாவைச் சேர்ந்த பெரும் முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், ஆளும் அரசியல்வாதிகள், உயர் பொறுப்புகளில் உள்ள உயர் அதிகாரிகள் என ஆளும் வர்க்கத் தினர் வெளிநாடுகளில் உள்ள வங்கி களில் குவித்து வைத்திருக்கிற கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் கோடி என தெரியவந்துள்ளது. அதிர்ச்சிகரமான இந்த விபரத் தை மத்திய குற்றப் புலனாய்வுக் கழகத்தின்(சிபிஐ)இயக்குநர் ஏ.பி.சிங் வெளியிட்டுள்ளார். இந்திய உழைப்பாளி மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரிப் பணத்திலிருந்தும், இந்திய நாட்டின் செல்வாதாரங்களிலிருந்தும் கொள் ளையடிக்கப்பட்ட இந்த மிகப்பெரும் தொகை, சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு செய்கிற அதிகாரமிக்க தனி நபர்களுக்கும் பெரும்முதலாளிகளின் நிறுவனங்களுக்கும் சொர்க்கங் களாக திகழ்கிற மொரீஷியஸ், சுவிட் சர்லாந்து, லீச்சென்ஸ்டெய்ன், பிரிட் டிஷ் விரிட்ஜின் தீவுகள் போன்ற நாடுகளில் இருக்கும் வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ளது என்ற விபரத் தையும் அவர் வெளியிட்டுள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் வெளி நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள சொத் துக்களை மீட்பது தொடர்பான சர்வ தேச காவல்துறை ஒத்துழைப்பு அமைப்பான இண்டர்போலின் முதல் மாநாடு திங்களன்று புது தில்லியில் துவங்கியது. இந்த மாநாட் டைத் துவக்கி வைத்து சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் உரையாற்றினார். அப்போது, “வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் சட்டவிரோதமான முறையில் குவிக்கப்பட்டுள்ள பணத்தில் சுமார் 500 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியர்களுக்குச் சொந்தமானது என கணக்கிடப் பட்டுள்ளது. இந்த சட்டவிரோத மானப் பணத்தில் பெருமளவான பணம் சுவிஸ் வங்கிகளில் இந்தியா வைச் சேர்ந்தவர்களால் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். 500 பில்லியன் டாலர் என்பது, இந்திய ரூபாய் மதிப்பில் 24.5லட்சம் கோடி ஆகும். சட்டவிரோதமாக குவிக்கப்பட் டுள்ள இந்த பெரும் தொகை குறித்த விபரங்களையும், அவற்றை பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல் குறித்த தகவல்களையும் பெறுவதற் கே நீண்டகாலம் செலவாகிவிட்டது எனக்குறிப்பிட்ட ஏ.பி.சிங், உலகின் பல்வேறு நாடுகளில் ஊழல்களால் கொள்ளையடிக்கப்படும் பணம் வரிஏய்ப்பு சொர்க்கங்களாக திகழும் இத்தகைய நாடுகளின் வங்கிகளில் வந்து குவிகின்றன என்றும் குறிப்பிட்டார். இந்நாடுகளில் குவிக்கப்பட் டுள்ள சட்டவிரோதப் பணத்தை பற்றிய விபரம் அறிந்துகொள்வது, அவற்றை முடக்குவது, கைப்பற்று வது, மீண்டும் நமது நாட்டிற்குள் கொண்டுவருவது என அனைத்து மட்டத்திலும் சட்டத்தடைகள் ஏராள மாக இருக்கின்றன என குறிப்பிட்ட ஏ.பி.சிங், இதை சீர்செய்வதும், கருப்புப் பணத்தை மீட்கவும், அரசி யல் உறுதியுடன் கூடிய ஒருங் கிணைந்த நடவடிக்கை அவசியம் என்றும் கூறினார். இன்றைய உலகளாவிய பொரு ளாதாரச் சூழலில், உலக நிதிச்சந் தைகள் பணம் என்பது ஓரிடத்தி லிருந்து மற்றொரு இடத்திற்கு கண் ணிமைக்கும் நேரத்தில் மிக வேக மாக பயணிக்கவும் பாய்ந்து செல்ல வும் அனுமதிக்கின்றன; இந்தப் பணம் எங்கு செல்கிறது என்பதை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமாக மாறியிருக்கிறது; இது உலகளாவிய ஊழலுக்கும், நிதி சார்ந்த கிரிமினல் குற்றங்களுக்கும் காரணமாகிறது; இது மிகப்பெரும் சவாலே என்றும் அவர் கூறினார். எல்லைகளின்றி பணம் பாய்ந் தோடுகிறது; அதைக் கையாள்வது தொடர்பான குற்றங்களும் நாடு விட்டு நாடு பரவிச்செல்கின்றன; ஆனால் இந்தக்குற்றங்களை விசாரிப்பதற்கான, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற் கான, அவர்களை உரிய முறையில் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்து வதற்கான பணிகளில் நாடுகளின் சட்டங்களும், எல்லைப் பிரச்சனை களும் முன்னுக்கு வருகின்றன; தடையாக நிற்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு நாட்டில் கொள்ளையடிக்கப் படுகிற பணம் தங்கு தடையின்றி பல்வேறு நாடுகளுக்கு எப்படி பரவுகிறது என்பதை இந்தியாவில் நடந்த வரலாறு காணாத ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய போது, சிபிஐ கண்டது என்றும் அதிர்ச்சியடைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். “சமீபகாலத்தில் மத்திய குற்றப் புலனாய்வுக்கழகத்தால் (சிபிஐ) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் மற்றும் மது கோடாவால் நடத்தப்பட்ட ஊழல் போன்றவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த ஊழல்களால் சூறையாடப்பட்ட பண மானது துபாய்க்கு சென்றிருக்கிறது; சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறது; மொரீஷியசுக்கு சென்றிருக்கிறது; இந்த நாடுகளிலிருந்தெல்லாம் சுவிட்சர்லாந்துக்கும் இதர பல நாடு களின் வங்கிகளுக்கும் சென்றிருக் கிறது என்பதை அறிய முடிந்தது. இந்த ஊழல்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு உதவுவதற் கென்றே பல நிறுவனங்கள் இயங்கு கின்றன. சூறையாடப்பட்ட பணம் பல அடுக்குகளாக கைமாறி கைமாறி, பல நபர்களின் வங்கிக்கணக்கு களுக்கு மாறி மாறி எல்லைகளின்றி உலகெங்கிலும் பரவியிருக்கிறது என் பதையும் அறிய முடிகிறது” என்று ஏ.பி.சிங் விளக்கினார். இப்படி உலகெங்கிலும் உள்நாடு களில் வரி ஏய்ப்பு செய்துவிட்டு, அரசு நலத்திட்டங்களில் கொள் ளையடித்துவிட்டு வெளிநாடு களுக்கு எல்லைகடந்து கைமாற்றப் பட்ட கருப்புப்பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் = 100 ஆயிரம் கோடி) என உலகவங்கியால் மதிப் பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரி வித்தார். இவற்றில் 40 பில்லியன் டாலர் அளவிற்கான பணம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளர்முக நாடு களில் அரசின் உயரதிகாரிகளுக்கும் ஆளும் அரசியல் வாதிகளுக்கும் லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட பணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஒட்டுமொத்தப் பணத்தில் கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 5 பில்லியன் டாலர் அளவிற்கான பணம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் அதிர்ச்சி தெரிவித்தார். (பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: