எ°. கண்ணன் தொழிலாளரைச் சுரண்ட லைசென்சா? சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் ஏற்பாடு, கட்டற்ற சுரண்ட லுக்கானதாக மாறி இருக்கிறது. நிபந் தனைகளை, நிறுவனங்கள் மட்டுமே முன் வைக்கும் வாய்ப்பை வழங்கும் சட்ட மாக ளுநுஷ் அமைந்துள்ளது. 2005 ல் முன் மொழியப்பட்ட ளுநுஷ் சட்டத்திற்குப் பின், இந்தியாவில் 1046 ளுநுஷ்கள் செயல்படத் துவங்கியுள்ளன. தமிழ்நாட்டில் 139 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. பன்னாட்டு பெரும் முதலாளிகள் மனம் குளிர்ந்து தமி ழகத்தில் தொழில் துவங்குவதற்காக, மத் திய அரசு அளித்த வரிவிலக்கு களுக்கு அப்பாற்பட்டு, தமிழக அரசு, உள்ளூர் வரி, லெவி, விற்பனை வரி, டர்ன் ஓவர் வரி, மதிப்புக் கூட்டு வரி, வாங்கும் வரி, ஆக்ட் ராய் வரி, எலெக்ட்ரிசிட்டி செ° ஆகிய வற்றில் இருந்து விலக்கு அளித்துள்ளது. திருப்பெரும் புதூர் சிறப்புப் பொருளா தார மண்டலத்தில் அமைந்துள்ள நோக் கியா நிறுவனத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். தமிழக அரசுடன் 2005 ஏப்ரல் 6 அன்று நோக்கியா நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பல அதிர்வுகளை, சாமானியர்கள் மத்தி யில் ஏற்படுத்தும். ஒன்று, நோக்கியா நிறு வனம் 675 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதற்காக அரசு தர வேண்டிய வரிச் சலுகைகளும் இடம் பெற்று இருக்கிறது. அதில் ஒன்று, மதிப் புக் கூட்டு வரி மற்றும் மத்திய விற்பனை வரி ஆகிய இரண்டின் மூலமாக நோக்கியா நிறுவனம் செலுத்தி இருக்க வேண்டிய தொகை, 2008 ம் ஆண்டில் 638 கோடி ரூபாய். ஆனால் தமிழ் நாடு அரசு ஏற்கனவே சம்மதித்ததன் கார ணமாக, மேற்படித் தொகையைச் செலுத்தி இருக்கிறது. இரண்டாவதாக, நிலம் விலைபேசியதில் அரசு செய்த மோசடியை தலைமை கணக்காயர் அம் பலப்படுத்தியுள்ளார். தேவைப்பட்ட 210 ஏக்கர் நிலத்திற்கு, ஏக்கர் ஒன்றுக்கு 9 லட்சம் ரூபாய் விலை இருந்த நேரத்தில், 4.5 லட்ச ரூபாய்க்கு விலை பேசி விற் றிருக்கிறது தமிழக அரசு. இதன் மூலம் மாநில அரசின் வருவாய்த் துறைக்கு 7.4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவதாக, துவக்கத்தில் 1200 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பையும், தொழிலாளி ஒருவருக்கு ரூ. 8000 (2006 ல்) வரை மாதச்சம்பளம் தரப் போவ தாகவும் உறுதி அளித்திருந்தது. ஆனால் ஜூலை 2008 ல் சேகரிக்கப்பட்ட விவரத் தின்படி 4548 தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்ததாகவும், மாதச்சம் பளம் 3400 ரூபாய் முதல் 5400 ரூபாய் வரையில் மட்டுமே கொடுக்கப்பட்டிருக் கிறது. அதே நேரத்தில் உலகத்தின் இதர பகுதிகளில் பணிபுரியும் நோக்கியா தொழிலாளர் ஒருவருக்கு 44624 ஈரோ அதாவது ரூ.29 லட்சம் ஒரு ஆண்டுக்கு கொடுத்து வருகிறது. அப்படியானால் இந்தியத் தொழிலாளி அவ்வளவு மலி வான கூலிக்கு உழைப்பவரா? அந்த நாடுகளில் இருக்கும் வாழ்வியல் முறை, விலைவாசி ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் குறைவாக இருக்க லாம். தேவையை விடவும் பலமடங்கு குறைவான கூலியைத் தருவதை அரசு கள் எப்படி நியாயப்படுத்தினாலும் ஏற்க முடியாது. நான்காவதாக, ஒப்பந்தத் தொழிலாளர் களைக் கொண்டு, நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்துகிற உழைப்புக் கொள்ளை. 2008 கணக்கின்படி 2893 தொழிலாளர்கள் நோக்கியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரி கின்றனர். 1970 ல் இந்திய அரசு, ஒப்பந் தத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப் படுத்தும் சட்டத்தை முன்மொழிந்து அம லாக்கி வருகிறது. ஆனால் நோக்கியாவின் நிரந்தரத் தொழிலில் சுமார் 3000 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணி புரிவதை மாற்றி, நிரந்தரப்படுத்த எந்த வகையிலும் மாநில அரசோ, மத்திய அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை. இவை அனைத்தும் புரிந்துணர்வு ஒப்பந் தம் என்ற பெயரில் இந்திய வளங்களை யும், தொழிலாளர்களையும் கொள்ளை யடிக்கக் கொடுக்கப்படும் லைசென்° என்றே கருதமுடியும். மேலே குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தையும் “எக்கனா மிக்கல் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி” பத்திரிகையில், மதுமிதா என்பவர் எழுதி யுள்ளார். இதேபோல் ‘ஹ]ண்டாய் மோட்டார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந் தம் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும். தேவைப்பட்ட 543 ஏக்கர் நிலத்தை அர சிடம் இருந்து 40 கோடி ரூபாய் விலை யில் வாங்கியுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் கார் உற்பத்தி செய்யும் வகையில், அரசு தனது தரப்பிலான தண்ணீர், மின் சாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு களைச் செய்து தரவேண்டும். இன்று ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு லட்சம் உற் பத்தி செய்த போது இருந்த தொழிலாளர் களை விடவும் இன்று எண்ணிக்கை குறைவு. தமிழ்நாடு அரசும், ‘ஹ]ண்டாய் நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத் தில், மொத்த நிலமும், சீரமைப்புப் பணி கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவை அனைத்தும் நிறைவு செய்யப் பட்டு, ‘ஹ]ண்டாய் நிறுவனத்தின் கை யில் ஒப்படைக்கப்பட்ட பின் 15 சதமான தொகையைப் பிடித்துக் கொண்டு மீதித் தொகையை அரசிடம் ஒப்படைக்கும் என குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் நிறுவனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் பைப்லைன் ஏற்பாடு களை அரசு தனது செலவில், குறிப்பிட்ட கால அவகாசத்தில் செய்து தரவேண் டும். மனிதக் கழிவுகள் மற்றும் நிறுவனத் தின் திடக் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்ற அதற்கான டேங்க் போன்ற கட்டுமானப் பணிகளையும் அரசு செய்து தர வேண்டும். உலோகக் கழிவுகள், ஆயில் ரேக், பா°பேட் கட்டிகள், பெயிண்ட் உள்ளிட்ட பல்வேறு வேதியி யல் கழிவுகள் ஆகிய அனைத்தையும் புதைக்க அல்லது வெளியேற்ற உரிய நட வடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந் தனைகளை கூட, தேவைக்கேற்ப மாற் றிட சம்மதித்துள்ளது. இவைகளை புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட 8 மாதங்களில் அரசு செய்து முடிக்க வேண்டும் என்பதும் நிறுவனங்கள் முன் வைத்துள்ள நிபந்தனை. இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங் களின் பெயரில் தான், 500க்கும் அதிக மான பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறு வனங்கள் தமிழகத்தில் குறிப்பாக திருப் பெரும்புதூரில் முதலீடு செய்துள்ளன. உலகின் பெரும் நிறுவனங்கள் என அழைக்கப்படுகிற, நோக்கியா, கோனே, க்ஷஆறு, டைம்லர், ‘ஹ]ண்டாய், சாம்சங், தோஷிபா, யூனிபெரெ°, நிஷான், ரெனோல்ட், செயிண்ட் கோபைன், அரேவா, மற்றும் ஃபாக்°கான் ஆகி யவை திருப்பெரும் புதூரை சுற்றிலும் அமைந்துள்ளன. ‘இந்து°தான் டைம்°’ இதழுக்கு அரசு அதிகாரி அளித்த பேட்டியில், 300 கொரிய நிறு வனங்களும், 170 ஜப்பானிய நிறுவனங் களும், 18 தைவான் நிறுவனங்களும் சென்னை மாநகரைச் சுற்றி இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஒரகடம் பகுதியில் மட்டும் 2500 ஏக்கர் நிலம் சிப்காட் மூலம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. எனவே தான் தினம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்கிற அறிவிப்பு களை கடந்த காலத்தில் பார்க்க முடிந்தது. தாராளமயக் கொள்கைகளை, இந் நாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளி களுக்கு திறந்து விட்ட நிலையில், தொழி லாளர்களின் ஒன்றுசேரும் சுதந்திரமும், கூட்டுபேர உரிமையும் பறிபோகிறது. இப் பறிப்பை முன்நிபந்தனையாகக் கொண்டுதான், அரசுகளும் நிறுவனங் களும் மேற்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைகின்றன. அதாவது தொழிலாளர் உரிமைகளின் மீதான அடமானத்தின் மீது, முதலாளிகளின் லாப விகிதத்தை அதிகப்படுத்த, அரசு கள் அளிக்கும் உத்தரவாதத்தை உள்ள டக்கியது, புரிந்துணர்வு ஒப்பந்தம். இதுபோன்ற பல்வேறு தொழிலாளர் விரோத அணுகுமுறையை, வளர்ச்சி பெற்ற நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டிஷ், தென் கொரியா, தைவான், பின்லாந்து, இத்தாலி என்று மூன்று கண்டங்களில் இருந்து வருகை தந்துள்ள நிறுவனங்கள் அம லாக்கிக் கொண்டிருக்கின்றன. தொழிற் சங்கங்களை அங்கீகரித்துப் பேச மறுப் பது, லாபம் குறைந்து விடக் கூடாது என் பதனால் தான். வருகிற பட்ஜெட் தொடரில் மாநில அரசு, தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் இயற்றுவதும்,. மத்திய அரசு, ஐ எல் ஓ-வின் இணக்க விதிக ளான 87, 98 ஆகியவற்றிற்கு ஒப்புதல் கொடுப்பதும், பிப்ரவரி 28 வேலை நிறுத்தத்தின் அடிப்படை கோரிக்கைகள். இந்திய தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமையை, ஒன்று கூடும் சுதந்திரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையை அனைத் துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: