அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடுக வாலிபர் சங்கம் பிரச்சார இயக்கம் ஈரோடு, பிப். 13- அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் புதன்கிழமை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.ஈரோடு லக்காபுரத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்தை அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இப்பிரச்சார இயக்கத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசு நிறுவனங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பணியில் அமர்த்துவதை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை சீர்படுத்தி புதிய தேர்வுக் கொள்கைகளை உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இப்பிரச்சார இயக்கத்தை காலிங்கராயன்பாளையம் பகுதியில் நிறைவு செய்து வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர். விஜயராகவன் உரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: