கைப்பற்றுவோம் போராட்டங்கள் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கிகள்! லா° ஏஞ்சல்°, பிப்.13 – முதலாளித்துவ எதிர்ப் புப் போராட்டமாக அமெ ரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்கள், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், துறை முகங்கள் உள்ளிட்ட பல் வேறு இடங்களைக் கைப் பற்றி போராட்டங்களை நடத்தி வரும் அமெரிக்க மக்கள், வங்கிகளைத் திடீ ரென்று கைப்பற்றும் போராட்டத்தை அறிவித் துள்ளனர். வால் °டிரீட் டில் அமைந்துள்ள பல வங் கிகளைத் திடீரென்று கைப் பற்றிக் கொள்வதன் மூலம் “ஒரு விழுக்காட்டினர்” மீது நிர்ப்பந்தம் செலுத்த முடியும் என்று போராட் டக்குழுவினர் கூறியுள்ளனர். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த போராட்டக் குழுவினரில் ஒருவரான ரெஃபூஜியா மாடா, தங்கள் நியாயமான பங்கை வங்கி கள் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம். இதில் குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டு களில் பேங்க் ஆப் அமெரிக்கா எந்தவித வரியும் செலுத்த வில்லை. அவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பதை வலி யுறுத்தியே வங்கிகளைக் கைப்பற்றும் போராட்டங் களை நடத்தப் போகிறோம் என்று குறிப்பிட்டார். 99 விழுக்காடு மக்களின் தேவைகளை அலட்சியப் படுத்தும் அமெரிக்க அரசு, வங்கிகளைப் பாதுகாக்க நிதியை வாரி வழங்குகிறது. இதைக்கண்டு அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்தப் பிரச்சனைகளை முன்வைத்து கைப்பற்று வோம் போராட்டங்கள் நின்றுவிடவில்லை என்ற செய்தியையும் அமெரிக்க மக்களுக்குச் சொல்ல வேண் டியுள்ளது. சொல்லப் போனால் கூடுதல் வலு வோடு நாம் முன்னேறு கிறோம் என்கிறார்கள் போராட்டக்குழுவினர். அட்லாண்டாவில் கைது அமெரிக்காவின் மற் றொரு நகரமான அட்லா ண்டாவில் வங்கி ஒன்றை மூடும் நடவடிக்கைக்கு எதி ராக நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்ற ஆர்ப் பாட்டம் நடந்தது. அந்த வங்கிக்குள் நுழைந்து கைப் பற்றும் போராட்டத்தை நடத்தினர். உள்ளே நுழைந் தவர்களில் எட்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதுவரையில் இந்தப் போராட்டங்களில் பங் கேற்றதற்காகக் கைதுசெய் யப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஆறாயிரத் திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: