உதகை: அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு சீல் உதகை, பிப். 13- உதகை நகராட்சியில் அனுமதியின்றி கட்டப் பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டடிடத்திற்கு சீல் வைத்திட ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், நிலச்சரிவு பாதிப்பு களை தடுத்திடும் வகையிலும் மா°டர் பிளான்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உதகையில் புதியதாக கட்டிடம் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களின் கூரைகளை அகற்றி புதுப்பித்தலுக்கும் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். இதன் பின்னரே, கட்டுமானப் பணிகளை துவங்க அனுமதிக்கப்படும். ஆனால், இவ்விதிமுறைகளை மீறி நகராட்சி பகுதிகளில் பலர் கட்டிடங்களை புதியதாக கட்டி வருகின்றனர். இக்கட்டிடங்களை கண்டறிந்து அகற்றிடும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உதகை லவ்டேல் காவல்நிலையத்தின் பின்புறத்திலுள்ள கிரண்ட் அப் சாலையில் வனத்துறை காப்புக்காடு பகுதியில் விதிமுறைகள் மீறி அனுமதியின்றி கூடுதலாக 2 கட்டிடங்கள் மற்றும் ஜெனரேட்டர் அறை ஆகியவை புதியதாக கட்டப்பட்டதும் தெரியவந்தது. முன்னதாக, இப்பங்களாவில் கடந்த ஆண்டு கூடுதலாக கட்டிடம் கட்டப்படுவது குறித்த தகவலறிந்து, நகராட்சி அதிகாரிகளால் கூடுதலான கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, மீண்டும் அனுமதியின்றி கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்ட பங்களாவினை சீல் வைத்து நடவடிக்கை எடுத்திட நகராட்சி ஆணையாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை கண்டறிந்து சீல் வைத்திடவும். கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்படுகின்ற பொருட்களை பறிமுதல் செய்து நட வடிக்கை எடுத்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply