அதிகமா கூல்டிரிங்க்° குடிக்காதீங்க! அதிகமாக கூல்டிரிங்க்° (குளிர்பானங்கள்) குடிப்பவர் களுக்கு கடுமையான நுரையீரல் நோய்களான ஆ°துமா மற்றும் சுவாசப்பை அடைப்பு போன்றவை தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியை ஆ°திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். இந்த ஆய்விற்காக 16 வயதிற்கு மேற்பட்ட 17 ஆயிரம் பேரை அவர்கள் ஆய்வு செய்தனர். இவர்களில், 10 சதவிகிதத்தினர் தினமும் அரை லிட்டருக்கும் அதிக மாக குளிர்பானங்களை குடித்து வந்தனர். இதில் 13.3 சதவி கிதத்தினருக்கு ஆ°துமாவும், 15.6 சதவிகிதத்தினருக்கு சுவாசப்பை அடைப்பும் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. அதேபோல், அளவிற்கு அதிகமாக குளிர்பானங்களை குடிப்பவர்களுக்கு, மற்றவர்களை விட 1.2 மடங்கு அதிகம் ஆ°துமாவும், 1.7 மடங்கு அதிகம் சுவாசப்பை அடைப் பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித் தனர். மேலும், குளிர்பானங்களோடு புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடையவர்களுக்கு எளிதில் சுவாசப்பை அடைப்பு நோய் வரும் எனவும் எச்சரித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், குளிர்பானங்களால், உடல் பரு மன், இதயம் சம்பந்தமான நோய்கள் வரவும் வாய்ப் புள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave A Reply