வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை புதுதில்லி, பிப்.12- தேர்தலின் போது ஓட் டுக்கு பணம் கொடுப்பவர் களுக்கு இனி ஒரு ஆண்டு சிறைத் தண்டனை கிடைக் கும் எனத்தெரிகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு கிரிமினல் குற்றப்பிரிவின் கீழ் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை யை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தேர் தல் ஆணைய கண்காணிப்பு பிரிவுத் தலைவர் பி.கே.தா° செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- பணம் மற்றும் அதிகார பலம் தேர்தல் ஆணையத் திற்கு பெரும் சவாலாக உள் ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில், அதிக அளவாக உத்தரப்பிரதேசத்தில், சுமார் 54 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிபட்டுள் ளது. பஞ்சாப்பில் 13 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. வாக்காளர்க ளுக்கு பணம் கொடுப்பவர் கள் மீது, கிரிமினல் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் கூறி னார். ஒரு ஆண்டு சிறை இதனிடையே தேர்தல் ஆணையத்தின் வேண்டு கோளை ஏற்றுக்கொண் டுள்ள மத்திய சட்டத்துறை, இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பவர் களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபரா தம் விதிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கவும் சட்டத்திருத்தம் செய்ய பரிந்துரை வழங்கப் பட்டுள்ளது.

Leave A Reply