ஒப்பந்தக் கூலிகளாக 6 ஆயிரம் செவிலியர்கள் காலியாக கிடக்கும் 16 ஆயிரம் பணியிடங்கள் அரசு மருத்துவமனைகளை சீர்குலைக்க முயற்சி திண்டுக்கல், பிப்.12- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை சீர் குலைக்க அரசு மேற்கொள் ளும் முயற்சிக்கு எதிராக மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டாக போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்கத் தின் மாநிலப் பொதுச் செயலா ளர் கே.எம்.தியாகராஜன் கூறிய தாவது:- தமிழ்நாட்டில் உள்ள மருத் துவமனைகளில் கிட்டத்தட்ட 15,600 பணியிடங்கள் காலி யாக உள்ளன. இந்தப் பணி யிடங்களை நிரப்பினால் மக்க ளுக்கு மேலும் கூடுதலாக சேவையாற்ற முடியும். அரசு மருத்துவத்துறையை தனியார் மயமாக்கத் துடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் என்ற முடிவை அமல்படுத்தி யது. 2001ம் ஆண்டு ரூ.2500 சம்பளத்திற்கு 6 ஆயிரம் செவி லியர்களை ஒப்பந்த கூலி களாக பணி நியமனம் செய்தது. இவர்களுக்கு தற்போது ரூ. 4,500 சம்பளம் கொடுக்கப்பட் டாலும், இன்று வரை இவர் களை அரசு நிரந்தரப்படுத்தா மல் விட்டுவிட்டது. மருத்துவத்துறையில் மாநில அளவில் தற்போது நிர்வாக ஊழியர்கள் 2500 பேர் உள்ளனர். மேலும் 1500 காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப் படவில்லை. மருத்துவமனை யில் உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசு ஆணைப் படி கடந்த 2010ம் ஆண்டு மருத்துவத்துறை பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட் டது. 2011ம் ஆண்டு 485 பணி யிடங்களுக்கு தேர்வு நடை பெற்றது. இதுவரை இந்த தேர் வின் முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. இதே போல் மருந் தாளுநர்கள் பணியிடங்கள் 350ம், லேப் டெக்னீசியர்கள் பணியிடங்கள் 300ம், அடிப் படைப் பணியாளர்கள் பணியி டங்கள் 2000 என காலியாக உள்ளன. பொதுவாக இந்த பணியிடங்கள் காலியாக உள்ள தால் வெளி நோயாளிகளுக்கு முழுமையான மருத்துவ சேவையாற்ற முடியவில்லை. இந்நிலையில் விரிவ டைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் அரசு மருத் துவமனையில் அமல்படுத்து கிறார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என் றால் தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், சிறப்பு மருத் துவர்கள், பார்மசி°ட்டுக்கள், லேப்டெக்னீசியன்கள் நியமிக் கப்பட வேண்டும். ஆனால் பணி நியமனம் இல்லை. மாறாக இருக்கிற ஊழியர்களைக் கொண்டும் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்று கூறு கிறது. இது எப்படி சாத்தியம் ? மேலும் தற்போது பதவி யேற்றுள்ள தமிழ்நாடு சுகாதா ரத் திட்ட இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், மருத்துவ மனையில் புதிய பணியிடங் களை நிரப்புவதற்குப் பதிலாக ஆட்குறைப்பு நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 3 ஷிப்டு பணி நடைபெறுகிறது. ஒரு ஷிப்டில் பணியாற்றும் ஒரு மருந்தாளுநர் 221நோயா ளிகளுக்கு மருந்துகள் வழங்கி யாக வேண்டும். ஒரு லேப் டெக்னீசியன் 400 நோயாளி களுக்கு மருத்துவப் பரிசோத னை செய்திருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையில் ஒரு வர் குறைந்தாலும் சம்பந்தப் பட்ட மருந்தாளுநர் மற்றும் லேப் டெக்னீசியன் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள். பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு மாறாக ஆட் குறைப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பணியாளர் பற் றாக்குறையால் மருத்துவம னையை பராமரிப்பதில் சிரமம் உள்ளது. உதாரணமாக திண் டுக்கல் அரசு மருத்துவமனை யில் அடிப்படை பணியாளர் கள் 10 பேர் தான் உள்ளனர். இவர்களை வைத்துக் கொண்டு துப்புரவுப் பணி, சீட்டு எழு துவது உட்பட பல பணிகளை எவ்வாறு செய்ய முடியும்?. விரி வடைந்த மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தை செயல் படுத்தும் மருத்துவமனை களில் குறைந்தது போ°ட் ஆப்ரேட்டிவ் நோயாளி களுக்கு என 20 படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆனால் 20 படுக்கைகள் இல்லை. மேலும், அதற்குரிய பணியா ளர்கள் நியமிக்கப்படாமல், இருக்கிற பணியாளர்களை வைத்து இந்தத் திட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அரசு கூறுகிறது. ஆகவே அரசு மருத்துவ மனைகளை சீர்குலைக்க அரசு எடுக்கும் நடவடிக்கை களை எதிர்த்து நாங்கள் கூட் டுப் போராட்டம் நடத்த உள் ளோம். நிர்வாக ஊழியர்கள், லேப் டெக்னீசியன்கள், மருந் தாளுநர்கள் என அனைவரும் சேர்ந்து கூட்டமைப்பு உரு வாக்கி உள்ளோம். ஏப்ரல் 14ல்சென்னையில் உள்ள மருத்து வத்துறை இயக்குநர் அலுவல கத்திற்கு எதிராகவும் போராட் டம் நடத்த உள்ளோம். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.